பக்கம்:தமிழ் இனம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இனம்

13

ணம்--அழகு அழுக்கு ஆடைகளை அழுக்குப் போக்கி வண்ணம் செய்பவன் (அழகு செய்பவன்) வண்ணத்தான் அல்லது வண்ணான் எனப் பெயர் பெற்றான். சலவைத் தொழிலாளிக்கு ‘வண்ணத்தான்’ என்ற பெயர் வழக்கு இன்னும் மலையாள நாட்டில் உண்டு.

‘தாளாண்மை’ என்பது ‘முயற்சி’ என்னும் பொருளை உடையது. வறிய நிலத்தில் நீர் பாய்ச்சிப் பதப்படுத்திக் கலப்பை கொண்டு உழுது, எருப்போட்டு வயலைப் பக்குவப்படுத்தி விதைகளை விதைத்து...... அறுவடை செய்யும் வரை உழவன் மேற்கொள்ளும் முயற்சி அளவிடற்கரியதன்றாே? அவனிடம் தாளாண்மை இல்லையாயின் ஓரினத்தின் வாழ்வே கெட்டுவிடுமன்றாே? இத்தகைய முயற்சியுடையவன் ‘தாளாளன்’ எனப் பெயர் பெற்றான். தாளாண்மையால் வந்த பொருளை அவன் பிறர்க்கு உதவும் நிலையில் வேளாளன் எனப்பட்டான். (வேளாண்மை-உதவி). உயிரைத் துரும்பாக மதித்துப் பல கல் தொலைவு ஆழந்தெரியாத கடலில் கட்டு மரங்களைச் செலுத்தி மீன் பிடித்து வாழ்ந்த மனிதன் கடலரசன் எனப் பாராட்டப்பட்டான். அவனே கடற்கரையில் வாழ்ந்த காரணத்தால் ‘கரையான்-கரையாள்–கரையாளன்’ என்னும் பெயர்களைப் பெற்றான். பரவை-கடல் பரவன்-கடலன்; கடலருகில் வாழ்பவன், கடலில் வாழ்பவன், கடலைக்கொண்டு வாழ்பவன் ‘பரவன்’ எனப் பெயர் பெற்றான். மலையில் வாழ்ந்தவன் ‘மலையன்’ என்றும், காட்டில் வாழ்ந்தவன் ‘காடன், காடவன்’ என்றும், ஊரில் வாழ்ந்தவன் ‘ஊரன்’ என்றும், பெயர் பெற்றனர். ஊரை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/10&oldid=1378653" இலிருந்து மீள்விக்கப்பட்டது