பக்கம்:தமிழ் இனம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் பெற்ற தனிச் செல்வம்

23

இன்றேல், ஆகாயப் பூ நாறிற்று’ என்றுழி, அது, சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக்கூறினன் என்று உலகம் இழித்திடப்படுதலின், இதுவும் இழித்திடப் படும்,” என்றார். இவற்றால், இப்பகுதி உலகியலும், புனைந்துரையும் கலந்தது என்பது வெளிப்படை. இனி இவ்வகப் பொருட் சுருக்கம் வருமாறு:–

அகப்பொருட் சுருக்கம்

பன்னிரண்டு வயதுடைய ஒரு மங்கை தன் தோழியருடன் ஒரு பொழிலிடத்தே மலர் கொய்து நீராடி விளையாட வருவாள்; பதினாறு வயதுடைய ஆண்மகன் ஒருவன் வேட்டை மேற்கொண்டு தன் படைசூழ அப்பெண் இருக்கும் பூம்பொழிலுக்கு அணித்தேயுள்ள காட்டுக்கு வருவன். இவ்விருவரும் இறை கூட்டுவிக்கத் தத்தம் குழுவினரைப் பிரிந்து ஓர் இடத்தில் சந்திப்பர். இவ்விருவரையும் தலைவன்,—தலைவி என்று நூல்கள் கூறும். திடீரென ஒருவரை ஒருவர் கண்டு வியந்து தெளிந்து காந்தருவ முறைமையிற் கூடுவர். பின்ன்ர், தலைவன் தோழியைத் தன் வயப்படுத்திக்கொண்டு, அவள் உதவியால் அடிக்கடி சந்தித்துப் பழக்கம் கொள்வன். நாளடைவில் இருவர்க்கும் உள்ள களவு ஒழுக்கம் சிலர்க்கும் பலர்க்கும் பரவி, ஊரில் அவர் தோன்றும்போது, தலைவியின் பெற்றாேர் அவளை இற்செறிப்பர். தலைவியின் உடல் நாளுக்கு நாள் இளைத்தலைக் கண்ட செவிலித்தாய், அணங்கோ-பேயோ அவளை வருத்தியதாகஎண்ணி, ‘’வேலன்’ என்கிற பூசாரியைக் கொண்டு முருகனுக்குப் பூசைபோட்டு ஒர் ஆட்டைப் பலியிட நினைப்பள். அதனை அறிந்த தோழி, “ஆட்டைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/20&oldid=1371658" இலிருந்து மீள்விக்கப்பட்டது