பக்கம்:தமிழ் இனம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தமிழ் இனம்

மீளி, எயினன், எயிற்றி, மறவன், மறத்தி எனப் பெயர் தாங்கினர்; முல்லை நில மக்கள் தோன்றல், மனைவி, கிழத்தி, இடையன், இடைச்சி, ஆயன், ஆய்ச்சி எனப் பெயர்கள் வழங்கப்பெற்றனர். முல்லை நிலம் ஐந்து நிலங்களுக்கும் இடையே அமைந்திருந்த காரணத்தால், இடை நிலத்தார் என்னும் பொருள்பட முல்லை நில மக்கள் ‘இடையர்’ எனப்பட்டனர். மருத நிலத்து மக்கள் ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி, உழவன், உழத்தி எனப் பெயர் பெற்றனர். நெய்தல் நில மக்கள் சேர்ப்பன், புலம்பன், பரவன், பரத்தி, நுழையன், நுழைச்சி, அலவன், அலத்தி எனப் பெயர் பெற்றனர். இவ்வொவ்வொரு நில மக்களுள்ளும் தலை மக்கள், பொது மக்கள் என்ற இரண்டே பிரிவுகள் உண்டு. அரசனும் குடிமகனும் என்னும் பிரிவைப்போல இப்பிரிவுகள் அமைந்திருந்தன.

அலுவல் முதலியன பற்றிய பிரிவுகள்

ஆட்சி முறை அமைந்த பின்னரே நகரங்களிலும் சிற்றூர்களிலும், இக்காலத்தைப் போலவே, அலுவல் காரணமாக அலுவற் பெயர்கள் வழங்கலாயின. அரசு செய்பவன் அரசன்; அரசன் மெய்க் காப்பாளராக இருப்பவர் அகம்படியர்; மறம்-வீரம், வீரத்தை உடையவர் மறவர்; படையை ஆட்சி புரிந்தவன் படையாட்சி; இவனே நாயகன் (நாயகர்) எனப் பெயர் பெற்றான். பறை - இச்சொல் மலையாளத்தில் ‘சொல்லுதல்’ என்ற பொருளைத் தரும்; அரசன் ஆணையை மாநகரத்தார்க்குப் பறையறைந்து சொல்லுபவன் பறையன், வண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/9&oldid=1388358" இலிருந்து மீள்விக்கப்பட்டது