பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பார்த்தசாரதி

111

ஒருவன்தான் என்பது இல்லை. குரங்கு தாவும்போது ஏற்றுக் கொள்ளாத கிளையும் உண்டோ? சோழ நாட்டிற்குரிய இருபத்து நான்கு காதம் பூமிக்கு வேண்டுமானால் நீ அரசனாக இருக்கலாம். அது தவிர உலகின் மற்ற பகுதிகளை எல்லாம் கடல் விழுங்கி விட இல்லை. கவிஞர்கள் அங்கே போய் வாழ முடியும்! உன் கருத்தைத் திருத்திக் கொள் வருகிறேன் நான்.”

மன்னவனும் நீயோ? வளநாடும் நின்னதுவோ?
உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன்-என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
காதம் இருபத்து நான்கொழியக் காசினியை
ஒதக் கடல்கொண் டொளித்ததோ - மேதினியில்
கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா!நீ முனிந்தால்
இல்லையோ எங்கட் கிடம்?”

ஓதினேன் = சொன்னேன். விரைந்து = சீக்கிரமாக, வேந்து = அரசன், கொம்பு = கிளை, காதம் = ஓர் அளவு, மேதினி = உலகம், ஓதக்கடல் = அலைபாயும் கடல், கொற்றவா = அரசே, முனிந்தால் = வெறுத்தால்

இவ்வாறு கூறிவிட்டுச் சோழனின் விடையையோ, மறுமொழியையோ கூட எதிர்பார்க்காமல் விடுவிடென்று மேலாடையை உதறிக் கொண்டு அவையிலிருந்து நடந்து வெளியேறினார் கம்பர். ‘உலகம் பரந்தது!’ என்று அவர் கூறிவிட்டுச் சென்ற அந்த வார்த்தை கணீரென்று வெகு நேரம் வரை அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

40. அன்னமும் ஆபரணமும்

பாட்டைப் பாடுவதிலும் புதிய புதிய கற்பனைகளைப் பின்னி வெளியிடுவதிலும் கவிஞர்களுக்கு எந்தவிதமான மன