பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

113

புலவரை இலைக்கு முன்பு அமர்த்தி இலையில் நீர் தெளித்துத் தூய்மை செய்வதற்காகக் கையில் நீருடன் வள்ளல் இலைக்கு முன் குனிந்த போது அவசரத்தில் விரல் மாறி இட்டிருந்த அந்தப் பெரிய மோதிரம் நழுவிப் புலவர் இலையில் விழுந்து உருண்டது.செல்வத்திற்கும் இலக்குமி கடாட்சத்திற்கும் அறிகுறியாக இலக்குமி உருவத்தோடு கூடிய அந்த மோதிரத்தைக் கையிலிருந்து கழற்றாமல் அணிந்திருந்தார் புகழ் செல்வராகிய சடைய வள்ளல். எண்ணெய் நீராடும் நாளில் மட்டும் அதைக் கழற்றும் வழக்கமுடைய அவர் அன்று காலை எண்ணெய் நீராடியபின் அவசர அவசரமாக மோதிரங்களை அணிந்து கொண்டபோது நடு விரலுக்கு அடுத்த விரலில் மாற்றி அணிந்து கொண்டு விட்டார் அந்த இலக்குமி மோதிரத்தை. அப்போது அவசரத்தில் அதைக் கவனிக்க நேரமில்லை. இப்போது பரிமாறும் தருணத்தில் இலையில் தண்ணிர் தெளிக்குங்கால் அது நழுவி விழுந்த உடன்தான் அந்தத் தவறு வள்ளலுக்குப் புரிந்தது. மோதிரம் நழுவி விழுந்ததுகூட அவருக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கவில்லை. ‘புலவர் அதை ஏதாவது அபசாரமாக எண்ணிக் கொள்வாரோ? என்ற பயமும், துயரமுமே அவரை அப்போது வாட்டின.

‘மன்னித்துக் கொள்ள வேண்டும்’ எனக் கெஞ்சுவது போன்ற பார்வையோடு தலை நிமிர்ந்து புலவரைப் பார்ந்தார் வள்ளல். புலவர் அந்தப் பார்வைக்குப் பாடல் ஒன்றால் விடை அளித்தார்.

பாட்டாற் சிறந்த புலவரெல்லாம் பாடும் சடையா
கொடையாளா கேட்டேன் உன்தன் புகழ் கேட்டேன்
கிளர்ந்த மனத்துடன் இங்குற்றேன் போட்டாய்
இலையிற் பொன்னுடனே பொன் ஆபரணமும்
புமையிது கேட்டேன் பசியால் அன்னத்தை
வைத்தாய் பொன்னை வழக்காமோ?”

பான் = இலக்குமி வடிவம், ஆபரணம் = அணிகலன். வேட்டேன் = விரும்பினேன். அன்னம் - சோறு. வழக்காமோ = ஏற்றதுதானோ.

உ.பூ. - 8