பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

125

கொட்டினார் முதலியார். அதன் பிறகு புலவருக்கும் முதலியாருக்கும் நிகழ்ந்த உரையாடல் கீழ்வருமாறு;

திருவேங்கட முதலியார்: உமக்கு இல்லாதது என்ன ஐயா? சொல்லித் தொலையும்! ஏன் விடாமல் ‘திருவேங்கட நாதா’ என்று பிதற்றி என் உயிரை வாங்குகிறீர்? இல்லாததைச் சொல்லுமே ஐயா!

புலவர்: (ஒரே வார்த்தையில்) ‘திரு’ (= செல்வம்)

திருவேங்கட முதலியார் : அதனால் என்ன வந்தது. உம் மனத்திற்கு?

புலவர்: வேம் (வேகும் = மனங்கொதித்து வருந்தும்)

திருவேங்கட முதலியார் : எப்படி ஐயா உண்டு காலந்தள்ளுகிறீர்?

புலவர் : கடம் (கடன் வாங்கி என்று பொருள்)

திருவேங்கட முதலியார் : எதனால், எங்கு உம்முடைய வாழ்க்கையில் ரஸமற்ற (சுவையற்ற) நிலை ஏற்பட்டது?

புலவர்:நா (நாவுக்கு ருசியாக உணவு உண்ண வசதி இல்லை என்று பொருள்)

திருவேங்கட முதலியார் : என்ன கேட்க இங்கு வந்தீர்? அதைச் சொல்லும்?. உம்ம்ம். நீர் சொல்ல வந்தது என்ன?

புலவர்:தா (கொடு என்று பரிசில் கேட்க வந்தேன்) அதைத் தான் இவ்வளவு நேரம் உங்களிடம் திரும்பத் திரும்பத் திரு+வேம்+கடம்+நாதா (திருவேங்கடநாதா) என்று கூறினேன்.

புலவர் சிரித்துக் கொண்டே கூறி முடித்தார்.

இரவலனே! உனக்கு இல்லாத என்ன? இதயம் என்ன?
பரவு உணவேது? சுவையற்ற தென்ன? சொற்பான்மை என்ன?
தர உரை செய்திட என்றான் அதற்கு ஒன்றும் சாற்றிலன்யான்
வர திருவேங்கட நாதா என்றேன் பொன்வழங்கினானே'