பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
126
தமிழ் இலக்கியக் கதைகள்
 

என்ற பாட்டு, கவிராயரிடமிருந்து பிறந்தது. சமர்த்திய வார்த்தையைப் புரிந்து கொண்டபின், புலவர் திறத்தை வியந்த வள்ளல் முதலியார் மன்னிப்புப் பெற்றுக் கொண்டு புலவருக்கு அவர் விருப்பப்படி வேண்டிய பொன்னை வாரி வழங்கினார்.

44. பெற்ற பாசம்

ம்பிகாபதியின் கதையைப் பற்றி நம்மிற் பலர் பொய்யென்றும் புனைசுருட்டென்றும் சற்று அசட்டையாகவே கருதி வருகின்றோம். கருத்தைப்பற்றிக் கூடத் தவறில்லை. அம்பிகாபதியின் காதலைப்பற்றி வழங்கும் கதையை ஒதுக்குவது இரசனைக்கு அழகு ஆகாது.

வடமொழியிலுள்ள 'பில்ஹணியத்தை' ஒத்தது அம்பிகா பதியைப் பற்றி நாம் கேட்டுவரும் கர்ண பரம்பரையைான காதல்கதை. காதலைப் பற்றிய தெய்வீக எண்ணம் அது கைகூடும்போது எழுவதைக் காட்டிலும் ஏற்றத் தாழ்வுகளால் அது கைகூடாமற் போகும் போதுதான் மிகுதியாக ஏற்படுகிறது.

காதவின் ஏமாற்றத்தை அழகாகச் சித்திரிக்கும் காவியங்கள் உலகெங்கும் உண்டு. லைலா மஜ்னுவையும் பில்ஹணியத்தையும் அனுபவித்து முடிந்தவுடன் காதலைப் பற்றி எந்தவிதமான தெய்வீக நினைவுகள், அபிப்ராயங்களாக மலர்கின்றனவோ, அதே நினைவு 'அம்பிகாபதி அமரவாதி' காதல் கதையின் இரசனையிலும் எழுகிறது. 

"அம்பிகாபதி கவிஞர் மகன்.அமராவதி சோழவேந்தனுக்கு மகள். இந்த ஏற்றத்தாழ்வுதான் அவர்கள் காதலுக்கு நடுவில் இருந்தது. இங்கே அம்பிகாபதியின் தந்தையாகிய கம்பரோ, அங்கே அமராவதியின் தந்தையாகிய சோழ மன்னனோ இந்தக் காதல், தோன்றி வளர்ந்ததை முதலில் அறிந்தார்களில்லை. ஆனால்தானே ஒருநாள் வெளிப்பட்டது இவர்கள் காதல், கம்பர்