பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

129

பரப்போத = கடல் சூழ்ந்த, ஞாலம் = உலகம், மைந்தன் = ராமன், தாதை = தசரதன், உரப்பு = அழுத்தம்.

என்பதே அந்தப் பாடல். ‘இவை உண்மையா? இடைக் காலத்துச் செருகலா?’ என்று ஆராயும் வழி நமக்கு வேண்டியதில்லை. காவியமாக எழத் தகுதி வாய்ந்த ஒரு காதல் கதைக்குப் பின்னணிச் சான்றாக அமையும் சுவை இதில் இருக்கிறது. அது போதும்.

உருக்கமும் நயமும் நிறைந்த உணர்ச்சிச் சித்திரமாக விளங்குகிறது இந்த தனிப்பாடல். இதை அனுபவிப்பது ரசிகனின் உரிமை.

45. தேவர்கள் கண்ணிமையாதது

வேளுர் வேல் முருகன் கோவில், பிரபலமடைந்திருந்த முருகன் திருத்தலங்களுள் ஒன்றாக விளங்கியது அந்தக் காலத்தில். அங்குமிங்கும் சுற்றியலைந்து களைத்து வந்த காளமேகம், அதன் கோபுர வாசலிற் சற்று இளைப்பாரக் கருதி உட்கார்ந்தார். அவருக்கு இருந்த தளர்ச்சியில் கோவிலுக்குள்ளே போக வேண்டுமென்று கூடத் தோன்றவில்லை.பால் காவடியும், அன்னக் காவடியும் தூக்கியவாறே நெருக்கியடித்துக் கொண்டே கோவிலுக்குள் நுழையும் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார். அன்று. கார்த்திகை நாளாகையினால் கோவிலுக்கு விசேஷப் பிரார்த்தனைக்காரர்கள் வந்துபோய்க் கொண்டிருந்தனர்.

கோயிலில் சங்கொலியும் மணிமுரசு,மேள, தாள முழக்கமும் பசியினால் அடைத்துப் போயிருந்த அவர் காதுகளையே செவிடாக்கி விடும் போலக் கேட்டது. தூணில் சாய்ந்து உட்கார்ந்த வண்ணம் பசி மயக்கத்திலிருந்த அவரை, ‘ஐயா, ஒரு செய்தி! தயவு செய்து எனக்கு அதைக் கூறுவீர்களா? என்ற இளங்குரல் நிமிர்ந்து பார்க்கச் செய்தது. புலவர் நிமிர்ந்து பார்த்தார். எதிரே

உ.பூ.-9