பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நா.பார்த்தசாரதி - 131

குளிர்ந்த கவிவாணர் பாட்டாகவே பையனுக்கு விடையைச் சொல்லிவிட்டார்.அது பாதி குறும்பு கலந்த விடையாக இருந்தது.

“மருகிருக்கும் வேளுரின் வயித்தி மகன்

குறமகளை மணந்தான் என்றே

உருகி அரன் நஞ்சு உண்டான் உமையவளும்

தவம்புரிந்தான் உயர்மால்மேனி

கருகிமிக மண்தின்றான் கமலன் முகம்

நான்கானான் கடவுளோர்கள்

இருவிழியும் இமையாமல் இரவுபகல்

உறங்காமல் இருக்கின்றாரே!"'

மருகு = மருக்கொழுந்துச் செடிகள் மிக வளர்ந்த, வயித்திமகன் = முருகன், குறமகள் = வள்ளி, உயர்மால் = கண்ணன், அரன் = சிவபெருமான், கருகி = மனம்வாடி, கடவுளர் = தேவர்கள்.

முருகக் கடவுள் மேல் வஞ்சப் புகழ்ச்சியாக இப்படி அவர் பாடிய பாடலில் அந்தப் பையன் விடையைக் கண்டானோ, என்னவோ? அதே பழைய புன்னகையுடன் கோவிலை நோக்கி அவன் நடந்தபோது தொலைவில் 'முருகா' என்று அலறிக் கொண்டிருந்தார் யாரோ ஒரு பக்தர். -

46. புலவர் போற்றிய புண்ணியன்

தொண்டைவள நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருமாகறல் இயற்கையழகு மிகுந்த ஊர். திருமாகறலையும் அதைச் சுற்றியிருந்த வேறு சில சிற்றுரர்களையும் இராஜமானியமாகப் பெற்று ஆண்டு வந்தார் புண்ணிகோட்டி முதலியார் என்பவர். இளமையில் மிகவும் ஏழையாக இருந்த அவர், தாம் செய்த அரிய பெரிய செயல் ஒன்றிற்காகச் சிற்றரசன் ஒருவனிடமிருந்து இந்த மானியத்தைப் பெற்றிருந்தார். 'தம் வாழ்க்கையில் அவ்வளவு பெரிய