பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நா.பார்த்தசாரதி 137

'கடல் கடக்க வேண்டிய பயணமாயிற்றே' என்று தயங்கினார். அன்பர்களிடமும் மாணவர்களிடமும் திருமுகத்தைக் காட்டச் செய்தபோது அவர்கள் யாவரும் அவரை ஈழத்திற்குப் போய் வருமாறு வற்புறுத்தி ஊக்கமளித்தனர். பற்றும் மதிப்பும் மிகுந்த மாணவர் இரண்டொருவர் அவருக்குத் தேவையான பணிவிடை களையும் தொண்டுகளையும் செய்ய உடன் வருவதாக உறுதி கூறினர். கவிஞர் ஈழநாட்டுப் பயணத்திற்கு ஒப்புக் கொண்டார்.வர ஒப்புக் கொண்டு விட்டதாகத் தூதர் மூலம் திருமுகம் பெற்ற பரராசசிங்கன் (ஈழ வேந்தன்) வசதியான மரக்கலம் ஒன்றைத் தகுந்த மீகாமன் ஒருவனோடு அனுப்பி வைத்தான். புலவருக்குக் கடற்பயணம் புதிது. உடன்வரும் மாணவர்கள் துணையை நம்பி ஒப்புக்கொண்டிருந்த அவருக்கு மரக்கலத்துடன் வந்த மீகாமனும் வேண்டிய துணிவூட்டிப் பேசினான். மரக்கலத்தைக் கடலில் செலுத்திக் கரை சேர்க்கும் அவனுடைய உறுதி மொழிகளும் கிடைக்கவே வீரராகவ முதலியார் துணிவோடு புறப்பட்டார்.

இரண்டரை நாள் கடற்பயணம் இன்பமாகக் கழித்தபின் ஈழநாட்டை அடைந்தனர் புலவரும் அவருடைய மாணவரும் கடற்பயணத்தில் ஒரு சிறு துன்பமும் அவருக்கு ஏற்படவில்லை. குளிர்ந்த கடற்காற்றும் மரக்கலத்தில் செல்லும் இன்பமும் அவருக்கு மிகவும் திருப்திகரமாகவே அமைந்திருந்தன. புலவருக்கெனப் பரராசசிங்கன் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்த அந்த மரக்கலத்தின் தலைவனாகிய மீகாமனோ அவரிடம் மிக அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொண்டான். மரக்கலமும் வசதிகள் நிறைந்ததாக இருந்தது.

புலவரும் அவருடைய மாணவரும் மரக்கலத்திலிருந்து இறங்கி, அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன் அரண்மனையில் பரராசசிங்கனுக்கும் அவனுடைய அமைச்சர்களுக்கும் நிகழ்ந்த வாக்குவாதம் ஒன்றை நாம் இங்கே முன்னதாக அறிந்துகொள்ள வேண்டும். х

ஈழநாட்டு அமைச்சர்கள் தம் அரசனுக்குத் தாங்கள் சொல்லக் கடமைப்பட்டிருந்த உண்மைகளைத்தான்