பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா.பார்த்தசாரதி
159
 

"ஐயா! உங்கள் நிபந்தனையைச் சொல்லுங்கள். பாடி முடிக்கிறோம்” என்று சிரித்தபடி சம்பந்தனைக் கேட்டனர்.அவர் சொன்னார்:

'மன்' என்று தொடங்கி மலுக்கு என்று முடிகிறாற் போல் ஒரு வெண்பா பாட வேண்டும். உடனே பாட உங்களால் முடியுமா?”

அவருடைய பொருளற்ற நிபந்தனையைக் கேட்டவுடன் இரட்டையர்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.முட்டாள்கள், படித்தவர்களுக்கு நிபந்தனை விதித்து, 'இப்படிச் செய்ய முடியுமா? அப்படிச் செய்ய முடியுமா?’ என்று கேட்கும் போது எந்தப் படித்த மனிதனுக்கும் ஆத்திரம் வரத்தானே செய்யும்? 'இந்தப் பயலுடைய திமிரை அடக்கிச் சரியானபடி மட்டம் தட்டிவிடவேண்டும் என்று ஒருவருக்கொருவர் இரகசியமாகக் கூறிக்கொண்டு சம்பந்தனை நோக்கி,"ஐயா! உங்கள் நிபந்தனைப் படியே 'மன்' என்று தொடங்கி 'மலுக்கு' என்று முடியுமாறு இப்போதே பாடுகிறோம்” என்று ஒப்புக் கொண்டனர். -

"எங்கே பார்க்கலாம் உங்கள் திறமையை” என்று சவரம் பண்ணிக் கொண்டிருந்த பரிகாரியிடமிருந்து அரை குறையாகத் தலையை விடுவித்துக் கொண்டு, இரட்டையர்களைப் பாடச் சொல்லி ஏவி விட்டுப் பார்த்தார் வள்ளல். ‘தாம் சொன்னபடியே இரட்டையர்களால் பாடமுடியப் போவதில்லை' என்ற அலட்சிய நோக்குதான் அவருடைய அந்தப் பார்வையில் இருந்தது.

இளஞ்சூரியர் கீழ்க்கண்டவாறு முதல் இரண்டு அடிகளைப் பாடினார்:

"மன்னுதிரு வண்ணா மலையிற்சம் பந்தனுக்குப்
பன்னு தலைச்சவரம் பண்ணுவதேன்?”

முதல்வருடைய குரல் முடிந்ததும் உடனே இரண்டாமவராகிய முதுசூரியர் அடுத்த இரண்டு அடிகளைக் கீழ்க்கண்டவாறு கணீரென்று சொன்னார்:

"மின்னின்