பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
164
தமிழ் இலக்கியக் கதைகள்
 

அங்கே எவ்வளவு கற்பனைகள் மலிந்து கிடக்கின்றன என்பதைப் பார்த்தீர்களா?

'இன்னின்னவற்றைப் பார்க்கத்தான் நமக்கு நேரமுண்டு; இன்னின்னவற்றைச் சிந்திக்கத்தான் நமக்கு நேரமுண்டு' என்று பணம் சேர்த்துச் சிக்கனப்படுத்துவதுபோல் மனத்தையும், சிந்தனையையும் கூடச் சிக்கனப் படுத்துவதற்குப் பழகிக் கொண்டு விட்ட நாம் அழகாக நினைத்துப் பார்ப்பதற்குக் கூட ஆற்றலில்லாதவர்களாய் இருக்கிறோம். நடைமுறைகளைச் சாதாரணமாகப் பார்த்துச் சாதாரணமாக நினைத்து மறந்து விடுகிறோம். இதனால் நமக்குக் கற்பனைகள் தோன்றுவதில்லை. தப்பித் தவறிக் கற்பனைகள் தோன்றினாலும் அவை பங்களா கட்டுவதையும், புதுக் கார் வாங்குவதையும், பணம் சேர்ப்பதையும் பற்றிய பகற் கனவுகளாகவே இருக்கின்றன. உலகத்துக் காட்சிகளிலும் பொருள்களிலும், கற்பனையும் உவமைகளையும் தத்துவங்களையும் கண்டு பிடிக்க வேண்டும். அத்தகைய நோக்கத்தோடு அவற்றைப் பார்க்க வேண்டும். அத்தகைய நோக்கத்தோடு அவற்றைச் சிந்திக்கவேண்டும்.

சிந்தித்து அடைகிற அறிவநுபவம்தான் வாழ்க்கையில் பெரிய செல்வம். அதை இழந்து விட்டு ஆசைகளில் ஊறிக் கொண்டு கிடப்பதில் என்ன இருக்கிறது?

உலகத்துக் காட்சிகளிலிருந்து தத்துவச் செறிவுள்ள உவமைகளைக் கண்டு பிடிப்பதை 'நிதரிசன அணி' என்று அணியிலக்கணக்காரர்கள் கூறுவர். -

அழகான கற்பனைக்கு இங்கே ஒர் உதாரணம் பார்க்கலாம். கதிரவன் தோன்றுகிற போது தாமரை மலர்கிறது. தாமரையை விடச் சிறிய பூவான குமுதம் கூம்பி விடுகிறது. -

சூரியனுடைய ஒளியைக் கண்டு தாமரை மலர்வானேன்? குமுத மலர் கூம்புவானேன்? காரணம் கூற முடியாத இயற்கை நியதி இது. 'தாமரைப்பூவின் இயல்பு அப்படி! குமுதப் பூவின் இயல்பு இப்படி' என்று பொதுவாக வேண்டுமானால் காரணம்