பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா.பார்த்தசாரதி
165
 

கூறலாம். ஒரு புலவன் இந்த நடைமுறையிலிருந்து அழகான உவமையைக் கண்டு பிடித்துச் சொல்கிறான். அவனுடைய சிந்தனையின் ஒப்பு நோக்கும் திறமை நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

பிறருடைய செல்வம் வளர்ச்சியடைதலைக் கண்டு பெரியோர்கள் முகமலர்ந்து வரவேற்பார்கள். சிறியோர்கள், 'இந்தப் பயலுக்கு இவ்வளவு செல்வம் வருவதா?’ என்று முகத்தைச் சுளிப்பார்கள்.

தாமரைப் பிறர் செல்வங்கண்டு மகிழ்ந்து முகமலரும் பெரியோர் போல் சூரியனைக் கண்டு மலர்கிறது. குமுதம், பிறர் செல்வங்கண்டு முகம் சுளிக்கும் சிறியோர் போல் சூரியனைக் கண்டு மூடிக்கொள்கிறது.

இந்தக் கற்பனையழகு செறிந்த உவமை எவ்வளவு அரிதாக இருக்கிறது பார்த்தீர்களா! சிந்தனைதான் பெரிய செல்வம்.அதை வளர்க்க வேண்டும். இதோ அந்தக் கவிதை

"பிறர்செல்வம் கண்டாற் பெரியோர் மகிழ்வும்
சிறியோர் பொறாத திறமும்-அறிவுறீஇச்
செங்கமலம் மெய்ம்மலர்ந்த தேங்குமுதம் மெய்யயர்ந்த
பொங்கொளியோன் வீறெய்தும் போது.”

அழகாகக் கற்பனை செய்து பழகுவது மனத்துக்கு நல்லது. ஆசைகளைக் கற்பனை செய்து மனத்தில் அழுக்கைச் சேர்க்காதீர்கள்.அழகுகளைக் கற்பனை செய்து மனத்தில் துய்மை சேருங்கள்!

55.நலிவும் நாணமும்

புதுக்கோட்டைச் சீமையில் விராலிமலை என்று ஒரு சிற்றுார் இருக்கிறது. அவ்வூரில் எழில் வாய்ந்ததொரு குன்றின் மேல் தமிழ் முருகன் கோவில் கொண்டிருக்கிறான். குன்றின்மேல் கண்