பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

173

மறவைப் பதிநதி வங்கிசத்தோன்
அரங்கேச வள்ளல்
அறவைப் பிணஞ்சுடல் தான்செய்
எண்ணான்கின் அறத்ததென்றோ
பிறர்கைக் கொடாமல் எடுத்தான்
அப்பாணன் பிணத்தினையே.”

(பெருந்தொகை 1230)

மறவை = மறவனூர், நதிவம்சம் = கங்கை, மரபு = எண்ணாண்கின் முப்பத்திரண்டு அறம்.

அரங்கேச வள்ளல் மாய்ந்த பின்னும் அந்தப் பண்பாட்டின் பெருமை மாயாமல் பாட்டில் வாழ்கிறது மேற்கண்டவாறு! உண்மைப் புகழ் என்றுமே அழிவதில்லையே!

58. சொல்லிக் காட்டினார்!

அக்காலத்துச் சேது நாட்டின் தலைநகரான இராமநாத புரத்தில் ஆதி சரவணப் பெருமாள் கவிராயர் என்று ஒரு கவிஞர் இருந்தார். அவர் படிப்பைப் போலவே தன்மானமும் மிகுந்தவர்; அட்டாவதானி என்ற சிறப்பும் பெற்றிருந்தவர். எந்த இடத்திலாவது தம் தகுதி, குறைவாக மதிப்பிடப் பெற்றுத் தாம் கீழான முறையில் நடத்தப் பெறுவதை உணர்ந்தால் அங்கே அவருடைய உள்ளம் குமுறும் தாம் குறைவாக நடத்தப்பட்டதைத் தம்மைக் குறைவாக நடத்தியவர்களுக்குச் சொல்லிக் காட்டி விட நா துடிக்கும். அஞ்சாமல் முகத்தில் அறைந்தாற் போல் சொல்லிக் காட்டி விட்டுத்தான் திரும்புவார்.

ஒரு சமயம் மலையாள தேசத்தின் கோநகரமாகிய திருவனந்தபுரத்துக்குப் போயிருந்தார் ஆதி சரவணப்பெருமாள் கவிராயர். அக்காலத்துத் திருவனந்தபுரம் பகுதியில் யாவருக்கும் தமிழ்மொழி நன்கு தெரிந்திருந்தது. தமிழ்க் கவிகளைப் புரிந்து