பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தமிழ் இலக்கியக் கதைகள்

கலைநாட்டிற் பெண்ணெனவே செய்தசர
ணாசனகன் கன்னிக் காகச்
நிலைநாட்டி வளைத்தடிய வீரகேரளமார
செயசிங்கேறே!”

திட்டுவதைக் கூட எத்தனை அழகாகத் திட்டியிருக்கிறார்கள். இந்தத் தமிழ்ப் புலவர்கள்? புலமை என்கிற பலம் எவ்வளவு நயமாக இடித்துச் சொல்லிக் காட்டும் உரிமையைத் தந்திருக்கிறது, பார்த்தீர்களா?

59. மனத்தைத் திருப்பி அனுப்புங்கள்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று சொன்னால் தமிழர்களுக்கு உடனே ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நாவல் நினைவுக்கு வரும்; அவருடைய நீதிநூற் பாடல்கள் நினைவுக்கு வரும். கருத்துச் செறிவுள்ள கீர்த்தனைகள் நினைவுக்கு வரும். முன்சீப்பாக வேலை பார்த்தவர் அவர். தம்முடைய காலத்தில் வாழ்ந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர்களிடமெல்லாம் நெருங்கிப் பழகியவர். அழகிய உரைநடையும் பாடல்களும் எழுதுகிற திறமை உள்ளவர்.

பொதுவாகவே பெரிய உத்தியோகங்களிலும் பதவிகளிலும் இருப்பவர்களுக்கு இலக்கியச் சுவை, கவி ஆர்வம் இவைகளெல்லாம் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பில்லாமற் போய்விடும். வேதநாயகம் பிள்ளை இதற்கு விதிவிலக்காக வாழ்ந்தார். அவர் தமக்கு வேண்டியவர்களுக்குக் கடிதம் எழுதினால் கூட அந்தக் கடிதத்தைக் கவிதைகளாலேயே எழுதுவார். அவருடைய காலத்தில் மாயூரத்துக்கு அருகில் திருவாவடுதுறை மடத்தில் சுப்பிரமணிய தேசிகர் என்னும் தவச்செல்வர் குரு மகா சந்நிதானமாக இருந்தார். அந்த நாட்களில் தமிழ் நாட்டில் சைவ சமயத்தையும், தமிழ் மொழியையும் வளர்க்கப் பாடுபட்ட மடங்களில் அதுவும் ஒன்று.