பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
180
தமிழ் இலக்கியக் கதைகள்
 

நகை முகமும் இரக்கமுள்ள மனமுமாக எவரிடத்தும் அன்போடு பழகும் கறுப்பனுக்கு ஆத்திரம் வந்து பார்த்ததாக யாரும் படிக் காசுப் புலவரிடம் கூறினதில்லை. எனவே கோபம் வருவதால் கறுப்பன் என்று பேர் ஏற்பட்டதாகக் கூறுவதும் பொருந்தாது.

அப்படியானால் இவ்வளவு நல்ல மனிதனுக்கு ஏன்தான் கறுப்பனென்று பேர் வந்தது? இந்த உலகத்தில் பொருத்த மில்லாப் பேர் வைப்பதென்பதே ஒரு வழக்கமாகி விட்டதா? கைகளே இல்லாதவனுக்குச் சக்கரபாணி என்றும், குரூபிக்குச் சுந்தரராசன் என்றும்,குருடனுக்குக் கண்ணாயிரம் என்றும் பெயர் வைப்பது போல் ஒரு கறுப்புமில்லாத நம் வள்ளலுக்குக் கறுப்பன் என்று பெயர் வாய்த்தது ஏனோ என்று மயங்கினார் புலவர்.

மாலைப்பதி சென்று கறுப்ப வள்ளலையே நேரில் பார்த்து விடுவது என்று புறப்பட்டார் படிக்காசுப் புலவர். போனார். பார்த்தார்.அவருக்கு இருந்த ஒரே சந்தேகமும் தீர்ந்து போயிற்று. 'கறுப்பன் நிறத்தினால் கறுப்பனாக இருக்கலாமோ' என்ற ஐயமும் பொய்யாகி விட்டது. நிறம் சிவந்த அழகிய தோற்றத்தையே கொண்டிருந்தான் கறுப்ப வள்ளல்.

என்ன வரவேற்பு எத்தகைய அன்பு எவ்வளவு பேணுதல்! படிக் காசுப் புலவர் திணறினார். கறுப்பனின் அன்பையும் பேணுதலையும் எப்படிப் போற்றுவதென்றே புரியவில்லை. பரிபூரணமான அன்பை வார்த்தைகளால் கூற முடியாதே ஒரு நாள் பகலுணவுக்குப் பின் கறுப்ப வள்ளலோடு அமர்ந்து தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தார் படிக் காசுப் புலவர். சிரித்தவாறே சிறிது நேரம் கண்ணிமைக்காமல் கறுப்ப வள்ளலையே பார்த்துக் கொண்டிருந்தார் புல்வர்.

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? என்னிடம் என்ன அதிசயம் உண்டாகி விட்டது” என்று சிரித்தபடி கேட்டான் வள்ளல்.

“ஒன்றுமில்லை. ஒரு கறுப்பும் (பஞ்சமும்) இல்லாத தொண்டை நாட்டில் கஸ்தூரி வள்ளலின் புதல்வராகப் பிறந்த