பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

181

உங்களை எல்லோரும் கறுப்பன், கறுப்பன் என்று அழைக்கிறார்கள், நீங்களோ நிறம் சிவக்கக் காட்சியளிக்கிறீர்கள்; கொடுத்துக் கொடுத்துக் கை சிவக்கிறீர்கள் தாம்பூலம் அணிந்து இதழ் சிவக்க வீற்றிருக்கிறீர்கள். உங்களை எப்படிக் கறுப்பன் என்பது!” என்ற கருத்துப்பட ஒர் அழகிய பாடலைப் பாடினார

“ஓர் கறுப்பும் இல்லாத தொண்டையள
நன்னாட்டில் உசிதவேளைச்
சீர் கறுப்பொன்றில்லாத கத்துரி
மன்னனருள் சேயைப் பார் மேல்
ஆர் கறுப்பன் என்று சொல்லி அழைத்
தாலும் நாமவனை அன்பினாலே
பேர் கறுப்பன் நிறச்சிவப்பன் கீர்த்தி
யினால் வெளுப்பனெனப் பேசலாமே!”

கறுப்பு, சிவப்பு, வெளுப்பு என்னும் வண்ணப் பெயர்களை வைத்துக் கொண்டு இந்தக் கவிஞர் எத்தனை அற்புதமாய்ச் ‘செப்பிடு வித்தை’ செய்கிறார், பார்த்தீர்களா? பழகின தோட்டக்காரனுக்கு எல்லாப் பூக்களின் பேரும் மணமும் தெரிகிற மாதிரி சொல் வளம் தெரிந்த கவிஞனிடம் வார்த்தைகள் தாம் எவ்வளவு நளினமாய் வளைந்து கொடுக்கின்றன!

61. மறக்க முடியாத சாப்பாடு

சீரங்கத்துக்கும் காளமேகப் புலவருடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவருடைய இளமைப் பருவத்து வாழ்வின் பெரும்பகுதி சீரங்கத்திலும் திருவானைக் காவிலும் கழிந்தது. இடைக் காலத்தில் மற்ற புலவர்கள் பாடிய தனிப்பாடல்களுக்கும் காளமேகப் புலவர் பாடிய பாடல்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது.

காளமேகப் புலவர் ஆசுகவி அதாவது கவி எழுதுவதற்குரிய இலக்கணக் கட்டுப்பாடுகளை முறையாகப் படிக்காமலே