பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

185

செய்து நீங்களும் புலவரும் என் வாசிப்பைக் கேட்கத்தான் வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே விடாப் பிடியாகக் கீழே உட்கார்ந்து மிருதங்கத்தின் உறையைக் கழற்றத் தொடங்கினார் வந்தவர்.

முத்துசாமிப் பிள்ளையின் முகத்தில் வெறுப்பின் நிழல் படிந்தது; புலவரோ குறும்புத் தனமாகச் சிரித்தார்.

“உமக்கென்ன? நீர் சிரிக்கிறீர்? விறகுக் கட்டையால் பாறையில் அடிப்பது போல் இன்னும் சிறிது நேரத்தில் மிருதங்கத்தின் முதுகைப் பிளக்கப் போகிறான். இந்தக் கற்றுக்குட்டி! அதைக் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருப்பதை விடச் சங்கீதத்தையே கழுவேற்றி விட்டால் என்ன? என்று தோன்றும்” என்று அழகிய சொக்கநாதரின் காதருகே மெல்லச் சொன்னார் முத்துசாமிப் பிள்ளை,

அழகிய சொக்கநாதர் பதில் சொல்லாமல் மீண்டும் குறும்பு மிளிரச் சிரித்தார்.

“என்ன? நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் பதில் பேசாமல் சிரிக்கிறீர்களே? சற்றுக் கோபத்தோடு புலவரை நோக்கி இப்படிக் கேட்டார் பிள்ளை.

“பேசாமல் கடைசிவரை பார்த்துக் கொண்டிருங்கள். இந்தப் பயல் சங்கீதத்தின் மானத்தை வாங்கி முடித்தவுடன் நான் இவன் மானத்தை வாங்கி விடுகிறேன்” என்று புலவர் மெதுவான குரலில் பிள்ளையிடம் கூறினார். கற்றுக் குட்டி வித்துவான் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தார்.

வாசிப்பா அது? தனக்கு வேண்டாத பகைவனின் முதுகில் யாரோ ஒரு முரட்டு மனிதன் ஓங்கி ஓங்கி அறைவது போல் மிருதங்கத்தின் இரு புறத்திலும் தன் இரு கைகளாலும் வெளுத்து வாங்கியது அந்தக் ‘கற்றுக் குட்டி’ மிருதங்கம் என்னும் அந்த வாத்தியத்துக்குக் கையும் காலும் முளைத்து, உயிரும், வந்து அது எழுந்திருந்து தன்னைச் சித்திரவதை செய்கிற ஆளை