பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
186
தமிழ் இலக்கியக் கதைகள்
 

உதைத்து விடுமோ என்று அஞ்சத் தக்க அளவு கொடுமையாக இருந்தது வாசிப்பு.

விதிக்கடங்கிய சுவரம், வளிதம், குழைவு, நளினம் ஒன்றுமே அந்த வாசிப்பில் இல்லை.

அப்போது நெல் அளந்துகொண்டு போவதற்கான கூடைகளை எடுத்துக்கொண்டு சில வேலைக்காரப் பெண்கள் அங்கே வந்தார்கள். முத்துசாமிப் பிள்ளையின் நிலங்களில் ஏதோ நடவு, களையெடுப்பு, இம்மாதிரி வேலைகளைச் செய்ததற்காகக் கூலி நெல் பெற்றுக் கொண்டு போக வந்தவர்கள் அந்தப் பெண்கள். -

"இவர்களுக்கு நெல் அளந்து போட்டு அனுப்பி விடுங்கள். அப்புறம் நான் மீண்டும் வாசிக்கிறேன்” என்றார் கற்றுக்குட்டி வித்துவான். பிள்ளைக்கு அதைக் கேட்டு உள்ளம் கொதித்தது. 'இதுவரையில் மிருதங்கத்தைக் கொன்றது போதாதென்று இன்னும் வேறு கொல்லப் போகிறாயா? என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டார். -

அப்போது புலவர் சிரித்துக் கொண்டே வித்துவானை நோக்கிக் கூறினார்: "ஐயா, வித்துவானே! இந்தப் பெண்கள் நெல்லளந்து கொண்டு போக வரவில்லையாம். இதுவரை இங்கே யாரோ சாணி தட்டிக் கொண்டிருக்கிறாற் போல் ஒசை கேட்டதே என்று எரு அள்ளிக்கொண்டு போகக் கூடைகளோடு வந்திருக்கிறார்கள்.”

கற்றுக்குட்டி வித்துவானுடைய முகத்தில் அசடு வழிந்தது. புலவருடைய கேலியைக் கேட்டு முத்துசாமிப்பிள்ளை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டார். வேலைக்காரப் பெண்களும் சிரித்துவிட்டார்கள். அந்தக் கேலிப் பேச்சை ஒரு பாட்டாகவே பாடிக் கற்றுக் குட்டியின் மானத்தை வாங்கி விட்டார் புலவர்.

“எங்கள்முத்து சாமிமன்னா இங்கே யொருவன்மிரு
தங்கமதை ஓயாமல் தட்டினான்-அங்கங்கே