பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தமிழ் இலக்கியக் கதைகள்

தேசீய எழுச்சி மட்டும் இல்லை! தமிழின் எழுச்சியும் இருக்கிறது. இப்படி எத்தனையோ தேசத் தொண்டர்கள் பட்ட துன்பங்களின் பயனான உரிமை வாழ்வைத்தான் நாம் சுதந்திரமாக அனுபவிக்கிறோம்.

67. எரிந்த படைப்பு

வைக்கோற் படைப்புப் பார்த்திருக்கிறீர்களா? நெல் அறுவடையாகிக் களத்தில் அடியுண்டயின் மீதமுள்ள பயிர்த் தாள்களை வெயிலில் காயச் செய்து சிறிய குன்றுபோல் படைப்பாக வேய்ந்து விடுவார்கள். நாட்டுப்புறங்களிலும், தமிழகத்துச் சிற்றுார்களிலும் இத்தகைய படைப்புக்களைக் காணலாம். வீட்டுக் கொல்லைப்புறங்களிலும், பொதுக் களங்களிலும், சிற்றுரர்களுக்கே அழகு தருவன போல் இத்தகைய வைக்கோற் குன்றுகள் தோன்றும். மஞ்சள் பொன் நிறத்துக்குச் சிறிது மங்கலாக இந்த வைக்கோலுக்கென்றே ஒரு நிறம் உண்டு.

இவற்றை ‘வைக்கோற் புரி’ என்றும் சில பகுதிகளில் வழங்குகிறார்கள். வைக்கோற் புரிகள் தீப்பற்றி எரிந்தாலும் சாம்பல் ஆனபின்பு சரிந்து துரளாகிச் சாய்வது இல்லை? எரிவதற்கு முன் தாம் எந்த வடிவத்தில் இருந்தனவோ அதே வடிவில் நிறம் மட்டுமே எரிந்து கருகித் தோன்றும். அவ்வாறு தோன்றும்போது உள்ளே அனல் இருப்பது வெளியில் தெரியாது. ஆனால் எதைக் கொண்டாவது தாக்கினால் பஞ்சு அமுங்குவது போல் அமுங்கித் துளாகித் தரை மட்டத்தில் புழுதியாகக் குவிந்துவிடும்.

மரித்த வைக்கோற் படைப்பின் இந்த நிலையைத் தன் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு உவமையாகச் சொல்லிக் கொள்கிறான் ஒரு தமிழ்ப் புலவன். துன்பங்கள் என்னும் தீக்கொழுந்துகள் பற்றி எரித்த பின்னும் தான் சரிந்து சாய்ந்து விடாமல் நிற்பதை எரிந்துபோன வைக்கோற் படைப்புக்கு ஒப்பிடுகிறான் புலவன். எரிந்து முடிந்த வைக்கோற் புரியை எங்கேயாவது எப்போதாவது அந்தப் புலவன்