பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
23
 

விட்டாய்? மாதங்கம் பரிசிலாகக் கிடைத்து விடுவது அவ்வளவு எளிதா என்ன?

(மாதங்கம் யானையென்றும் பெரிய பொன் என்றும் பொருள்படும்)

பாடினி : (சிரித்துக்கொண்டே அடடே! மாதங்கமா? இனி நமக்கு ஒரு குறையும் இல்லை என்று சொல்லுங்கள். அவ்வளவு தங்கமிருந்தால் வேறு என்ன குறை?

பாணன் : (கடுகடுப்பான நோக்குடன்) மறுபடியும் மறுபடியும் வம்பு செய்கிறாயே! நான், கிடைத்த பரிசில் 'வேழம்' என்று சொல்லுகிறேன். நீ என்னவோ புரியாமல் பேசுகிறாயே!

(வேழம் = கரும்பு, யானை என்று இரு பொருளுக்கும் உரிய சொல்)

பாடினி: (ஆச்சரியப்பட்டவள் போன்ற குறிப்புடன்) 'வேழமா! நன்றாகக் கடித்து இனிய சாற்றை உறிஞ்சலாமே?'

பாணன் : நாசமாய்ப் போயிற்றுப் போ! நான் 'பகடு' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.நீ என்னடா என்றால்..?

(பகடு - எருது, யானை என்ற இரு பொருள்களும் தரும்)

பாடினி : (இடைமறித்து) பகடா? ஏறில் கட்டி நிலத்தை உழலாமே- நல்லதாய்ப் போயிற்று!

பாணன் : இந்தா! சும்மா ஆளைப் பைத்தியம் ஆக்கிவிடப் பார்க்காதே! நான் சொல்லியது'கம்பமா' தான் நமக்குக் கிடைத்த பரிசில் என்பதையே அன்றி வேறு ஒன்றும் இல்லை!

(கம்பமா= கம்பத்தில் கட்டப்படும் விலங்காகிய யானை, கம்பு என்ற தானியத்தின் மாவு)

பாடினி: கம்பமா! களி கிளறிச் சாப்பிடலாமே? அந்தக் கம்ப மாவு தானே?...சாப்பிடச் சுவையாயிருக்குமே! (சிரிப்பை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு சொல்லுகிறாள்)