பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
தமிழ் இலக்கியக் கதைகள்
 

பாணன்: (உட்கார்ந்திருந்தவன் எழுந்துகொண்டே)சரி! சரி! உனக்குப் பைத்தியந்தான் பிடித்து விட்டது. பெற்று வந்த பரிசில் "கைம்மா'! அதுதான் 'யானை'. 'ஆமாம் யானை!'

(கைம்மா = துதிக்கையை உடைய விலங்காகிய 'யானை') (பாணன் ஒரு ஏமாற்றத்தோடு கூடிய வெடிச்சிரிப்புச் சிரிக்கிறான்)

பாடினி (கலக்கத்துடன்) அப்படியானால் உங்களுடைய பரிபாஷையில், ஒன்றுமில்லை என்று பொருள்..! பரிசில் பூஜ்யந்தான் என்று சொல்லுங்கள்...! (துயரும் கலக்கமும் தொனிக்கும் குரலில் சொன்னாள். ஒரு பரிசிலும் தராதவர்களை 'யானை தந்தான்’ என்று சொல்லி வேடிக்கையாகப் பேசுவது அந்தப் பாணனுக்கு வழக்கம்)

பாணன்: அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளேன்!

இம்பர்வான் எல்லை

இராமனையே பாடி
  என்கொணர்ந்தாய் பானா          
   நீயென்றாள் பாணி               

வம்பதாம் களபகம் என்றேன்

பூசும் என்றாள்
  மாதங்கம் என்றேன், யாம்          
   வாழ்ந்தோம் என்றாள்               

பம்பூசீர் வேழம் என்றேன்,

தின்னும் என்றாள்
  பகடு என்றேன், உழும்
   என்றாள் பழனந் தன்னைக்            

கம்பமா என்றேன்,

நற்களியாம் என்றாள்
  கைம்மா என்றேன்,
   சும்மா கலங்கினாளே.

இம்பர் = இவ்வுலகில், வான் எல்லை = வானளாவ