பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


10 இன்றைக்கு மட்டும் இரு!

நின்றையூரின் ஆறு போல அகன்ற வீதிகளுக்குள் நுழைந்து காளத்திநாத முதலியாரின் வீட்டைக் கண்டு பிடித்தபோது எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அவ்வளவும் அவர் ஊரிலில்லை, என்று தெரிந்ததும் ஏமாற்றமாக மாறிவிட்டது மதுர கவிராயருக்கு. மறுநாள் காலை எப்படியும் அவரை வீட்டில் பார்க்க முடியும் என்று அறிந்து கொண்டார். அப்போதுதான் மாலை நேரங் கழித்து சுற்றி இருள்படர ஆரம்பித்திருந்தது. அன்ன்றக்கு ஒரு நாள் இரவை எங்கேயாவது, எப்படியாவது கழித்துவிட்டால் மறுநாள் காலை காளத்தி நாதரைக் கண்டு வறுமை தீரப் பரிசில் பெற்றுவிடமுடியும். புலவர்க்கும் ஏழைகட்கும் பொருள் கொடுத்துக் காக்கும் இரட்சகனாக இருந்தார் காளத்திநாதர். வள்ளலென்ற தமிழ்ப் பெயர் அவருக்காகவே உண்டாகியிருக்க வேண்டுமென்று கூறினாலும் அதில் மிகை சிறிது மிருக்க முடியாது.

அழுக்கடைந்த கந்தல் ஆடை சோறு கண்டு சிலநாள் ஆகிய வயிறு. குழி விழுந்த, ஆனால் ஒளி நிறைந்த மலர்ந்த கண்கள். கலைகளின் தேஜஸ் முகத்திலே நன்றாகத் தெரிந்தது. ஓர் இடிந்துபோன சத்திரத்துத் திண்ணை முடங்கிக் கொள்ள இடமளித்தது. வறுமையோடு போராடும் அந்த ஏழைக் கவிஞனுக்கு வயிறு பசியால் முற்றிலும் வாடும்போது, உறக்கம் எங்கிருந்து வரும்? அதோடு பொழுது விடிந்தால் காளத்தி நாதரைக் கண்டுவிடலாம் என்ற ஆர்வமும் சேர்ந்துகொண்டது. அவனுக்குத் தூக்கம் வரவில்லை. மறுநாள் காலை காளத்தி நாதரைப் பார்த்த பிறகு தன் நிலையைக் கற்பனை செய்தவண்ணம் ஒடியது அவன் சிந்தனை.' இன்று வரைநம்மிடமிருந்து விலகாமல் நிழல் போலப் பின்பற்றி வாட்டும் வறுமைக்கு நாளைக் காலை நம்மிடமிருந்து விடுதலை! கவிஞர்களைப் போற்றிப் பேணுவதையே கடமையாகக் கொண்ட அந்த வள்ளல் நமக்கு உறுதியாக உதவி செய்வார். ஐயோ பாவம்! நம்மோடு விடாமற் சுற்றிச் சுற்றிக் கழுத்தறுத்த இவ்வறுமை இன்றைக்கு மட்டும் தன்