பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
31
 

சுதந்திரத்தோடு இருக்கட்டும். நாளை வைகறையில் வறுமை எங்கேயோ? நான் எங்கேயோ?' இப்படி எண்ணங்கள் அவன் மனத்திரையில் ஒடிக் கொண்டிருந்தன.

கவியின் மனத்தில் எழும் எந்த எண்ணங்களும் எண்ணங் களாகவே தங்கிவிடுவதில்லையே? அவைகள் பாட்டுருவம் பெற்றுவிடத் தவறமாட்டா. எண்ணங்களை எண்ணி வெளியிடுவதில் சாதாரண மனிதனுக்கும் கவிஞனுக்கும் உள்ள வேறுபாடு கூட அதுதான்.அந்தக் கவிஞனுடைய எண்ணங்கள் 'வறுமையை’ முன்னிலைப்படுத்தி அதை நோக்கியே அனுதாபத்தோடு பாடும் ஒரு வெண்பாவாக வெளிவருகின்றது.

"நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழற்போல நாளைக்கு இருப்பாயோ நல்குரவே-காளத்தி நிறைக்கே சென்றக்கால் நீயெங்கோ நானெங்கோ இன்றைக்கே சற்றே இரு”

இடிந்துபோன அந்தச் சத்திரத்தின் திண்ணையில் பல நாட்களாக உண்ணாத நிலையில் இத்தகைய வேடிக்கையான பாட்டுத் தோன்ற எப்படிப்பட்ட மனோபாவ எளிமை வேண்டும்? அது அந்தக் கவிக்குப் பூரணமாக இருந்திருக்கிறது போலும்!

11. பொய் சொன்ன வாய்

பரிசில் கொடுக்காது தம்மைப் போக்குக் காட்டி அனுப்பிவிட்ட செல்வர்களை எல்லாம் வரிசையாக எண்ணிப் பார்த்தார் கவிராயர். 'ஆமாம்! அவர்கள் எல்லாரையும் வாயலுக்கப் பாடி வைத்தோமே? அதற்குச் சரியான பாடம் கற்பித்து விட்டார்கள். கல்லுக்கும் இறுக்கமான இவர்கள் நெஞ்சு கொல்லுக்கா உருகிவிடப் போகிறது? ஒருபோதும் இல்லை. காசு பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை! கவிதையை உணரக்கூட இவர்களுடைய உள்ளம் இயலாததாக