பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழ் இலக்கியக் கதைகள்

மன்னன். “பெருங்காப்பியம் பாடுவதில் தமிழ் இலக்கிய உலகத்திலேயே இன்னார்தான் சிறந்தவர். அவருக்கு இணையாக வேறு எவருமே இல்லை” என்று ஒருவரைக் குறிப்பிட்டு அவன் உயர்த்திப் பேசிய போது அதுவரை மெளனமாக இருந்த ஒளவையார் வாய் திறந்து அவனுக்கு மறமொழி கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. திறமைக்கும் திறமையுடையவனுக்கும் உள்ள தொடர்பை அந்த மறுமொழி மூலம் சோழனுக்கு நன்றாக விளக்கினார். “ திறமை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் முழுமையாக அமைந்திருக்கும். அதைக்கொண்டு மற்றவர்கள் திறமையற்றவர்கள் என்று முடிவு கட்டுவது பெரிய தவறு.” ஒளவையார் சோழனுக்கு அதை விளக்க இந்த அடிப்படையை மேற்கொண்டார்.சோழன் தன் முடிவைப் பற்றிச் சிந்திக்கும்படி இருந்தது ஒளவையார் தக்க சான்றுகளோடு அவனுக்குக் கூறிய மறுமொழி.

செத்தை, நார் இவைகளைக் கொண்டு தூக்கணாங் குருவி கட்டுகின்ற கூட்டை நாம் ஆறறிவு படைத்த மனிதர்களாக இருந்தும் கட்ட முடியாது. இவ்வளவுக்கும் அந்தத் தூக்கனாங்குருவி நம்மினும் இழிவான அஃறிணையைச் சேர்ந்த ஒரு சிறு பறவைதான். அது பின்னுகிற ஒரு கூட்டை நாம் பின்ன முடியவில்லை என்பதனால் நம்மைத் திறமையற்றவர்களாகத் தீர்மானித்து விடமுடியுமா? அதுதான் போகட்டும் சிறு சிறு மண் சிகரங்களோடு கரையான் சமைத்துக் கொள்ளும் புற்றுக்களைப் போல் ஒன்றாவது நம்மால் சமைக்க முடியுமா? காற்றில் பறந்துவிடுமோ என்று சந்தேகம் கொள்ளத்தக்க சிறிய உருவம் அது படைக்கிறது அழகு அழகான மண்புற்றுக்களை! மாடமாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டி வனப்புச் செய்யும் மனிதக் கரங்கள் கேவலம் இந்தக் கறையான் புற்றுக்களைக் கட்டிவிட முடியாதா? முடியாதென்று இல்லை! ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு வேலையிலே திறமை. அவ்வளவு தான். அதுவே வேண்டாம்! மரக்கொம்பிலே கட்டுகின்ற தேன் கூட்டைப்போல் ஒரு கூடு கட்ட அந்தத் தேனியைக் காட்டிலும் பல வகையிலும் உயர்ந்த மனிதனால் முடியுமா? சிறு சிறு