பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழ் இலக்கியக் கதைகள்

போய்விட்டால் எப்படி? உச்சிப் பிள்ளையாரைப் பார்க்க வேண்டும் என்று ஆவலும் உந்தித் தள்ளப் படிகளைத் தாண்டி மேலே வேகமாக ஏறினார்.

இரண்டு நாழிகை கழிந்தபின் உச்சிப் பிள்ளையார் வழிபாட்டை முடித்துக்கொண்டு மறுபடியும் கீழே இறங்கினவர் இரண்டு மூன்று படிகளைத்தான் கடந்திருப்பார்..! சால்வையின் முன்தானை கனங்குறைந்து லேசாக இருந்ததைக் கண்டு மேலே இழுத்துப் பார்த்த அவருக்குத் துக்கி வாரிப் போட்டது! காசு முடிச்சை எந்தப் பயலோ அவிழ்த்துக் கொண்டு போயிருந்தான். தம்மை மறந்த பக்தியுடன் அவர் தரிசனம் செய்து கொண்டிருந்த போது எந்த முடிச்சவிழ்க்கும் பயலோ அந்த வேலையைச் செய்திருந்தான். உச்சிப் பிள்ளையார் மீது அவருக்குப் பெரிய கோபம் வந்துவிட்டது. அந்தப் பொல்லாத பிள்ளையாரைத் தரிசிக்க வந்ததனாலே தான் காசு பறி போயிற்று பிள்ளையாரையே முடிச்சவிழ்த்தவராக எண்ணி அது அவருடைய பரம்பரைக் குணம் போலும் என்றும் கூறிவிடுகிறார்! வேடிக்கையாகக்தான் சொல்கிறார் வேறொன்றுமில்லை.

“ஏ! உச்சிப் பிள்ளையாரே! உன் தம்பியாகிய முருகன் மாறுவேடத்தில் வள்ளியைத் திருடி மணந்து கொண்டான். மாமனாகிய திருமாலோ கண்ணனாக இருந்தபோது வெண்ணெயைத் திருடி உண்டான். நீரோ இன்று என்னுடைய முடிச்சை அவிழ்த்துக் காசைப் பறித்துக் கொள்ளச் செய்து விட்டீர்! இந்தத் திருட்டு உம்முடைய கோத்திரத்திற்கே உரிய பரம்பரைக் குணமா? என்ன?” இராம கவிராயர் வயிற்றெரிச்சல் தீரப் பிள்ளையாரை வைது தீர்த்தார்.

தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த
வம்பனோ நெய்திருடி மாயனாம்-அம்புலியில்
மூத்தபிள்ளை யாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தில் உள்ள குணம்”

தம்பி = முருகன். வம்பன் = கண்ணன், அம்புலி = அழகிய உலகு.