பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
தமிழ் இலக்கியக் கதைகள்
 

யானையின் வாய் தொங்கிக் கொண்டிருப்பதனால் தமிழில் யானைக்கு நால்வாய் என்றொரு பெயருண்டு. "இனிமேல் நான் என்னுடைய ஒரு வாய்க்கும் நால்வாய்க்கும் இரை தேட வேண்டும்" என்று முடியாது போல மலைத்து வருந்துவதாகக் கவி வீரராகவர் பேசும் கவிப்பேச்சில் பரராச சிங்கனைப் புகழ்கின்ற புகழ்ச்சி பழிப்பது போன்ற பிறிதோர் உருவில்வெளிப்படுகின்றது. "ஒரு வாய்' 'நால் வாய்' என்ற சொற்கள் பாடலின் பொருளுக்குச் சுவையூட்டுகின்றன.

மேலாடையோடு கைவீசிக்கொண்டு பரராசசிங்கனிடம் வந்த புலவர் யானைமேல் ஏறி அலங்காரமாக மீண்டு சென்ற காட்சி பெருமிதத்தோடு விளங்கிற்று. “ஒரு வாயையும், நால் வாயையும் எவ்வாறு காப்பேன்?’ என்றவர் அதற்குரிய செல்வமும் பெற்றுவிட்டோம் என்ற கவலை கலவாத மகிழ்ச்சியை இப்போது அடைந்துவிட்டார். ஒரு வாயும் நால்வாயும் உண்ணப்போதியது கிடைத்து விட்டது அல்லவா?

20. வடுகநாத வள்ளல்

செங்கலங்கை நகர் வடுகநாத முதலியார் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய சொன்ன சொல் தவறாத நேர்மையே நினைவுக்கு வரும். தருமன், அரிச்சந்திரன் முதலிய இதிகாச புருஷர்களின் மறு பிறப்போ என்று மதித்து மரியாதை செய்வர் அவரை.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உயிரையே ஈடு கொடுக்க வேண்டுமென்றாலும் கொடுக்கத் தயங்காத கொடைஞர் அவர்.இப்படிப்பட்ட வள்ளல் ஒருமுறை புகழேந்திப் புலவரைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பைப் பெற்றார். முடிவில் விடைபெற்றுக் கொள்ளும் போது வடுகநாதர் புகழேந்திப் புலவரை ஒருநாள் தம் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தார். புகழேந்திப் புலவரும் அப்படியே விருந்துண்ண வருவதாக