பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
53
 

அன்னம் = விருந்துச்சோறு, கர்ணன், சோமன் = வள்ளல்கள், கழல் = கூறல். . -

கர்ணனையும் சோமனையும்கூட வடுகநாதனுக்கு இணையாகக் கருத முடியவில்லை புலவரால்.

21. வயிற்றுப் பசி

ஆங்கூரில் அன்று சிவன் கோவிலில் உற்சவம். அலங்காரமான தோற்றத்துடன் ரிஷப வாகனருடராய்த் திருவீதி உலா வந்து கொண்டிருந்தார் சுவாமி. கொட்டுமேளம், நாயனம் முதலிய வாத்தியங்களின் இனிய ஒலி ஒருபுறம். சங்கு, திருச்சின்னம், மத்தளம், எக்காளம் முதலிய இசைக் கருவிகளின் பேராரவாரம் மற்றொருபுறம், பக்தர்களின் ஆரவாரமும் இந்த ஆரவாரத்தோடு கலந்து கோலாகலமாக விளங்கியது.

உலா வரும் சுவாமி பொன்னம்பலத்தார் மடத்தின் பக்கம் நெருங்கவும், முடங்கிக் கிடந்த இரட்டையர்கள் விழித்துக் கொண்டனர். பசியால் உடல் சோர்ந்து மடத்துத் திண்ணையில் இடத்தை நாடி ஒதுங்கிய அவர்கள், நான்கு நாட்களாகச் சோற்றைக் கண்ணால் கூடக் காணவில்லை. அடி வயிறு காய்ந்து கிடந்தனர். மயக்கமடைந்தவர்கள் போலத் தளர்ந்து விழுந்து கிடந்த அவர்களைக் கொட்டும் மேளமுமாகச் செய்த ஒலிகள் எழுப்பின. அவர்களுக்கு இருந்த பசியில் சங்கு ஒலியும் எக்காள சப்தமும்கூட அதிர்வேட்டுப் போலக் காதில் பட்டு உடலை ஒர் உலுக்கு உலுக்கி நடுங்கச் செய்தது. வயிற்றுப்பசி வாட்டும்போது நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்யவா முடிகிறது? அப்படியே மடத்துத் தூணில் சாய்ந்துகொண்டு வீதியில் எழுந்தருளும் சுவாமியை நோக்கி,

"தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளி யப்பா

நாங்கள் பசித்திருத்தல் ஞாயமோ?..”