பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழ் இலக்கியக் கதைகள்

தமிழ் இரசிகனாக உட்கார்ந்துவிடுவான்.கவிதையை இரசிப்பதில் அவனுக்கு அவ்வளவு ஆவல்.

இப்படி ஒருமுறை கவிராயர் குருவப்ப பூபனைக் காணச் சென்றிருந்த போது, வழக்கத்தை விடச் சற்றுப் பெரிய யோகம் அவருக்காக அங்கே காத்திருந்தது. கைதேர்ந்த வைரப் பரிசோதகர்களைக் கொண்டு பொறுக்கி எடுத்த புஷ்பராகக் கற்களைப் பதித்த ஒரு ஜதை கடுக்கன்களை அம்முறை அவருக்காகச் செய்து வைத்துக் காத்துக் கொண்டிருந்தான் குருவப்ப பூபன்.

அவன் கொடுத்துக் கொடுத்துத் தருமத் தழும்பேறிய தன் கைகளாலேயே அதைப் புலவர் காதுகளில் இட்டான். அப்படி இட்டபோதுதான் குருவப்ப பூபனுக்குத் தான் செய்திருந்த ஒரு சிறு தவறு தெரியவந்தது. ‘புலவருக்காகப் போடவேண்டும்’ என்ற ஆசை தூண்டிட அவசரத்தில் செய்து விட்ட அந்தக் கடுக்கன்கள் அவர் காதுகளுக்குக் கொஞ்சம் பெரிதாக இருந்தன. அதன் பலன்?...புலவருடைய தாடைகளில் அடிக்கடி மோதி இடித்தன கடுக்கன்கள். தூர்ந்து போயிருந்த அவர் காதுத் துளைகளை ஒட்டி இறுக்கிப் பிடித்த அவைகள் அவருக்குச் சிறிது வலியையும் கொடுத்தன. இதைக் கண்ட பூபன் அவைகளை அழித்துவிட்டு, அளவோடுகூடிய வேறு கடுக்கன்களைச் செய்வதாகவும், பிழைக்குத் தன்னை மன்னிக்கும்படியாகவும் புலவரிடம் கேட்டுக் கொண்டான். புலவர் சிரித்துக்கொண்டே, “உன் அன்புபோலப் பெரியதாகவும், நட்புபோல இறுக்கமாகவும் இருக்கும் இவைகளையே நான் அணிந்துகொள்கிறேன்! வேறு செய்யவேண்டா” என்று மறுத்தார். -

அளவைவிடப் பெரிதாகக் தாடைகளில் மோதியும், காதுத் துளைகளை ஒட்டி இறக்கி வலியை உண்டாக்கியும் வருத்த வேண்டியதற்குப் பதிலாக அற்புதமான கற்பனை ஒன்றை அளித்தன. அவை. “பாட்டும் தமிழும் அறியாத கஞ்சர்களிடம் போய்த் தமிழைப் பாடி வீண் துதி செய்யாதே என்று கன்னத்தில் மோதித் தாடைகளில் அடித்தன கடுக்கன்கள். ‘குருவப்ப பூபன் போன்ற வள்ளல்களிடம் மட்டும் தமிழ்ச்