பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

73

சுவையைக் கூறு! பிற வகையான பேதைகளிடம் என்றும் தமிழைக் கூறாதே’ என்று காதுகளில் இரகசியம் கூறவது போல ஒட்டி இறுக்கி வலிகொள்ளச் செய்தன.” இந்த அழகான கற்பனை பாட்டாக வடிவம் பெற்றது. புலவர் குறும்புச் சிரிப்போடு பாட ஆரம்பித்தார்.

ஏதிலே வறியவர்க்கும் இனிய
கவிப்புலவருக்கும் இரங்கியந்தப்
போதிலே தனங்கொடுக்கும்
தஞ்சைநகர்க் குருவப்பபூபன் எற்குக்
கோதிலே கிடந்துழலும்
பலரிடத்திற் சென்று தமிழ் கூறாவண்ணம்
காதிலே ஒட்டிட்டுத் தாடையின்
மோதக் கடுக்கன் தானிட்டானே.”

ஏதிலே = எப்போதும், தனம் = செல்வம், எற்கு = எனக்கு. கோது = குற்ற, ஒட்டுஇட்டு = இரகசியம் கூறி.

தமிழ்ப் பயனை வீண் செய்யாதே என்று கடுக்கன்கள் கன்னத்திலடித்துத் தண்டித்ததாகவும் ஒட்டி இரகசியம் கூறியதாகவும் பாடும் சமத்காரம் அபூர்வமாக அமைந்து விட்டது.

29. மோர் பெற்ற பேர்

பங்கனி மாதத்துப் படை பதைக்கும் வெய்யில் ஜீவராசிகளை எரித்து நீறாக்கிவிட முனைந்துவிட்டது போல உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்தது. தெருவில் ஈ காக்கை இல்லை. சூனிய வெளியாக விளங்கியது. காலைப் பொரிக்கும் அந்த வெய்யிலில் வெளியே கிளம்ப யாருக்குத்தான் துணிவு வரும்

ஆனால் தேசாந்திரியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் காளமேகத்துக்கு அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவா முடிகிறது? வெய்யிலும் மழையும் பார்த்து ஒடுங்குவதற்கு வீடு