பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
75
 

பட்டது. ஆனால் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. எதிரே வந்துகொண்டிருந்த அந்த மோர்க் காரியின் தலையில் வெய்யிலைத் தாங்க மோர்ப் பானையொன்று பெரிதாக இருந்தது. காலில் செருப்பணித்திருந்தாள். 'மோரோ மோர்’ என்று கூவிக்கொண்டு வந்த அவளுக்கும் காளமேகத்திற்கும் வித்தியாசம் இவ்வளவு தான்.

அவளை நிறுத்தி, மேலாடை முடிச்சில் இருந்த காற்பணம் காசை நீட்டி ஒரு குவளை மோர் கொடுக்குமாறு கேட்டார் காளமேகம். அவளும் அதை வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த ஒரு திண்ணையில் பானையை இறக்கி, அவருக்குக்கு வளை நிறைய மோர் கொடுத்தாள். குவளையைக் கையில் வாங்கி அதிலிருந்து இரண்டு வாய் மோர்தான் குடித்திருப்பார் காளமேகம்! 'இது மோர்தானா?' என்ற சந்தேகமாகப் போய்விட்டது அவருக்கு. ஒருவேளை தவறிப்போய்த் தண்ணீரைக் கொடுத்துவிட்டாளோ என்று கூடத்தோன்றியது. கூசாமல் தண்ணீரை விளாவி இருந்தாள் அந்த மோர்க்காரி. கடைவாயிலே வழிந்த மோரும் கையிற் குவளையும் தோன்ற அபிநயத்துடன் மண்டையை ஆட்டிக் கொண்டே பாட ஆரம்பித்துவிட்டார் காளமேகம்:

“காரென்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது

நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின்

வாரொன்று மென்னகிலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்

மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!”

"வானத்திலிருக்கும் போது உனக்கு மேகமென்று பெயர். தரையில் மழையாகப் பெய்த பின் தண்ணீரென்று பெயர். இந்த பாழாய்ப்போன மோர்க்காரிகள் கைக்கு வந்து பானையில் புகுந்த பிறகு உனக்கே மோர் என்றும் பெயர்-ஆகா! உன் பெயர் எவ்வளவு விரிந்துவிட்டது மூன்று பேரிலல்லவா பரவுகிறது உன் புகழ்'இக்கருத்தமையப் பாடி முடித்துவிட்டு, எஞ்சியமோருடன் குவளையை அந்த மோர்க்காரியிடம் கொடுத்து விட்டுச் சென்றார் காளமேகம். அந்த நிலையில், அப்போது அவள்கூட அவரைப் பித்தர் என்றுதான் எண்ணியிருக்க வேண்டும்.