பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
79
 

ஒருவனிடம் அந்தத் தோட்டத்தைப்பற்றியும் விவரமாகக் கேட்டறிந்து கொண்டார். தோட்டத்திற்குள்ள கட்டுக் காவல்களைப்பற்றி அந்த வேளாளன் சொன்ன போது 'என்ன நடந்திருக்கும்?' என்பதை அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. உடனே அதே வேளாளனிடம் அத்தோட்டத்தின் உரிமையாளராகிய திருமலைராய பூபதியின் இருப்பிடத்தை அறிந்துகொண்டு நகரத்தை நோக்கி வேகமாக நடந்தார்.

திருமலைராய பூபதியின் வீட்டை அடைந்த படிக்காசரின் நண்பர், "தமிழ்ப்புலவர் ஒருவர் வந்திருக்கிறார்” என்று உள்ளே சென்று கூறி அனுமதி பெற்று வருமாறு வாயிற் காவலனை அனுப்பினார். வாயிற் காவலன் உள்ளே சென்று வந்ததும், திருமலைராய பூபதி உள்ளே வரச்சொல்லி அன்போடு வேண்டிக் கொண்டதாக அவரிடம் கூற, அவர் மகிழ்ச்சியோடு உள்ளே சென்றார். உள்ளே ஓர் அறைப் பக்கமாக அவர் வந்து கொண்டிருந்தபோது சாளரத்தின் வழியே படிக்காசரின் தலை தெரிந்தது. வியப்புடனே தாம் நினைத்தது போலவே நடத்திருப்பதை எண்ணிக்கொண்டே சாளரத்தை நெருங்கினார். படிக்காசரைச் சைகை செய்து அழைத்து விவரங்களைச் சுருக்கமாக அறிந்து கொண்டு எப்படியும் விடுவிக்க முயல்வதாக உறுதி கூறிவிட்டு உள்ளே துழைந்தார்.

புலவர் உள்ளே நுழைந்த போது திருமலைராய பூபதி தாம் அருமையாக வளர்த்து வந்த பஞ்சவர்ணக் கிளியின் கூட்டை முன்வைத்து அதன் மழலையைக் கேட்டு அனுபவித்துக் கொண்டிருந்தார். பால், பழம், பருப்பு, முதலியவற்றை அதற்குக் கொடுத்து அது தன் செவ்வாயைத் திறக்கும் அழகை வியந்து கொண்டிருந்தார்.

தம் வரவு தெரியப் புலவர் கனைத்தார். பூபதி தலை நிமிர்ந்தார். பின் எழுந்து அன்போடு வரவேற்றுப் புலவரை அமரச் செய்தார். இப்போது வாயிற்புறத்து அறையிலிருந்து யாரோ பலமாகத் தொடர்ந்து விக்கும் ஒலிகேட்டது.பூபதி கிளிக்கூட்டை கையில் வைத்துக் கொண்டே “அது என்ன? யாரோ விக்குவது