பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
7
 

அவர் முகத்தில் புன்சிரிப்பின் சாயை நிழலிட்டது. இருவரும் சமதரையிலே செல்லும் நல்ல வழிக்கு வந்துவிட்டனர். இப்போது குருடர் அந்தப் பிரதேசத்தில் கணீரென்று எதிரொலிக்கும் படியாக எடுப்பான குரலில் இதோ பாடுகின்றார்.

‘குன்றும் குழியும் குறுகி வழி நடப்ப(து)
என்று விடியும்? எமக்கென் கோவே’

அதே புன்சிரிப்புக் கொஞ்சும் முகபாவத்துடன் பாடிச் சற்றே நிறுத்தினார் குருடர்.

‘ஒன்றும் கொடாதானைக் கோ வென்றும் கா என்றும் கூறில்
இடாதோ நமக்கிவ் விடி’
(கோ-அரசு. கா-கற்பகம், இடி.-துன்பம்)

என்று வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே குருடர் பாடிய முதலிரண்டு அடிகளைப் பூர்த்தி செய்தார், மேலே முதுகிலிருந்த நொண்டி, துன்பத்திலும் இன்பம் காணும் புலமை வாழ்க்கையில் பசி முதலிய துன்பங்களை வெல்லும் தூய கருவி சிரிப்புத்தானே! சிரிப்போடுகூட 'என்று விடியுமோ?' என்ற கேள்வியும் எதிரொலிக்கிறது.


2. சத்திரத்துச் சாப்பாடு

கல் பன்னிரண்டு நாழிகை ஆகியிருக்கும். உச்சிவெயில் படை பதைக்கும்படி காய்ந்து கொண்டிருந்தது. ஓ வென்ற பேராரவாரத்துடன் முட்டிமோதும் கடல் அலைகளின் ஒலி பயங்கரமாக இருந்தது. அதைவிடப் பயங்கரமாக இருந்தது. காளமேகத்தின் வயிற்றுப் பசி. காதை அடைத்தது. கண்கள் பஞ்சடைந்துபோய் ஒளி குன்றியிருந்தன. நாகப்பட்டினத்துக் கடற்கரை ஓரமாக நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்று கொண்டிருந்தார் காளமேகப் புலவர். எதிரே கட்டு