பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அச்சோ

5

அடைப்பை




அச்சோ = வியப்புக் குறிப்புச் சொல்
அஞர் = துன்பம், சோம்பல், நோய், வழுக்கு நிலம்
அஞலம் = கொசுகு, மின்மினி
அஞ்சம் = அன்னப்பறவை
அஞ்சனம் = மை, கறுப்பு, இருள், குற்றம்
அஞ்சித்தல் = பூசித்தல்
அஞ்சுகம் = கிளி
அஞ்செவி = உட்செவி
அஞ்ஞாதம் = பிறர் அறியாமை, மறைவு
அடகு = இலைக்கறி
அடங்கலர் = பகைவர்
அடர் = இதழ், தகடு, நெருக்கம்
அடர்தல் = சண்டை செய்தல், நெருங்கல், வருந்தல்
அடலை = துன்பம், நீறு, போர்
அடல் = வலி, வெற்றி, கொல்லுதல்
அடவி = காடு
அடார் = விலங்குகளைப் பிடிக்கப் பயன்படுத்தும் பொறி
அடி = கீழ், ஆதி, முன், மூலம், பாதம்
அடிகள் = கடவுள், குரு, முனிவர்
அடிசில் = சோறு
அடிஞானம் = சிவஞானம்
அடிதலை = வரலாறு
அடிப்பாடு = பழக்கம்
அடியுறை = பாதகாணிக்கை, அடிமை
அடிவருடல் = கால்பிடித்தல்
அடுகலம் = சமையல் பாத்திரம்
அடுகளம் = போர்க்களம்
அடுக்கம் = மலைப் பக்கம், சோலை
அடுக்கல் = வரிசை, மலை, தொடுத்தல்
அடுக்களை = சமையல் அறை
அடுதல் = சமைத்தல், கொல்லல், வருத்துதல், சாதல், வெல்லுதல், குற்றுதல்
அடுப்பு = பரணி நட்சத்திரம், அடுப்பு
அடை = முளை, இலை, வெற்றிலை, ஒரு பட்சணம், அபயம், சொல்லைச் சிறப்பிக்கும் சொல்
அடைக்காய் = தாம்பூலம், பாக்கு
அடைப்பம் = வெற்றிலைப்பை, அம்பட்டன் ஆயுதப்பை
அடைப்பை = வெற்றிலைப்பை