பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


= ஒன்றென்னும் எண்ணைக்குறிக்கும் குறி, ஆன்மா, உடல், காற்று, அக்கினி, பிரமன்
ககபதி = கருடன், இராசாளி
ககம் = அம்பு, பறவை, வாயு
ககனம் = ஆகாயம், காடு, வாயு மண்டலம், சேனை
ககுத்து =எருத்தின் திமில்
ககுபம் = திசை, மருதமரம்
ககேசன் = கருடன், சூரியன்
ககோள சாத்திரம் = வான சாத்திரம்
ககோளம் = வான வட்டம்
கக்கம் = அக்குள்
கங்கணம் = காப்பு, கைவளை
கங்கபத்திரம் = அம்பு, பருந்தின் இறகு
கங்கம் = சீப்பு, கழுகு, தீப்பொறி, பருந்து, யாகத்தம்பம்
கங்காதீரம் = கங்கைக்கரை
கங்காத்துவாரம் = அரித்துவாரம்
கங்காளமாலி = சிவன்
கங்காளம் = எலும்புக் கூடு, பெருங்கலம்
கங்காளி = காளி, பார்வதி
கங்கு = கருந்தினை, கரை, அணை, வயல் வரம்பு, வரிசை, தீப்பொறி, பருந்து, எல்லை
கங்குகரை = எல்லை, எண்ணிக்கை
கங்குல் = இரவு, இருள், இடையாமம்
கங்கைகுலத்தார் = வேளாளர்
கஜகர்ணம் = காதை,அசைக்கும் வித்தை,பெருமுயற்சி
கசடர் = கீழ்மக்கள்
கசடு = குற்றம், சந்தேகம், மாசு, தழும்பு
கசம் = ஆழ்ந்த குளம், மயிர், மிகுதி, தலைமயிர், யானை, குழி
கசனை = ஈரம்
கசாக்கிரம் = மயிர் நுனி
கசானனன் = யானை முக விநாயகன்
கசிதம் = பதித்தல், துடுப்பு
கசிவு = அன்பு, இரக்கம், சரம், வருத்தம், வேர்வை
கசிதல் = வருந்துதல், நெகிழ்தல்
கசு = கால்பலம்
கசுமலம் = அழுக்கு, கெட்டது
கசேந்திரன் = அரசயானை, ஐராவதம்