பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கசை

100

கடத்தல்



கசை = சவுக்கு, பசை, கவசம்
கச்சகம் = குரங்கு
கச்சட்டம் = கெளபீனம்
கச்சபம் = ஆமை, நவநிதியுள் ஒன்று
கச்சபி = கலைமகள் வீணை
கச்சம் = பக்கம், மரம், ஆமை, மரக்கால், ஒப்பந்தம், இலட்சம், ஊற்று, யானை கழுத்திடு கயிறு, முன் தானை, கச்சு, ஓர் அளவு
கச்சவடம் = சிறு வியாபாரம்
கச்சளம் = இருள், கண் மை
கச்சா = தாழ்மை, ஒருநிறை
கச்சால் = மீன் பிடிக்கும் கூடு
கச்சான் =மேற்குக் காற்று
கச்சி = காஞ்சீபுரம்
கச்சு = நூற் கயிறு, மேலாடை, அரைப்பெட்டிகை
கச்சூரம் = கழற்காய், பேர் ஈந்து
கச்சை = கயிறு, யானைக் கழுத்திடு கயிறு கவசம், கெளபீனம், தழும்பு, முழுப்புடவை
கச்சோதம் = மின்மினி
கஞலல் = பொலிதல், எழும்புதல், செய்தல், நெருங்குதல், மிகுதல்
கஞறம் = கள்
கஞற்றுதல் = நிரப்புதல்
கஞ்சம் = தாமரை, வஞ்சனை, வெண்கலம், தாளம், நீர்
கஞ்சனம் = கண்ணாடி, கரிக்குருவி, வலியான்
கஞ்சல் = குப்பை, கூளம்
கஞ்சன் = பிரம்மன், கம்சன், முடவன், குள்ளன், உலோபி
கஞ்சி = காஞ்சீபுரம், கஞ்சி
கஞ்சிகை = இரத்தினப்பல்லக்கு, குதிரை பூட்டிய தேர், திரைச்சீலை, ஆடை
கஞ்சுகம் = சட்டை, சீலை
கஞ்சுகன் = காவற்காரன், வைரவன்
கஞ்சுகி = சட்டை, பாம்பு, காவல்காரன்
கடகநாதன் = சேனாதிபதி
கடகம் = கேடகம்,மதில், கிம்புரி, இராஜதானி, காப்பு, வட்டம், யானைக்கூட்டம், சேனை, வாகு வலயம்
கடகன் = காரியத்தை நடத்துபவன், வல்லவன்
கடகு = கேடகம்
கடத்தல் = வெல்லுதல், மேற்படுதல், தாண்டுதல், மீறுதல், அழித்தல், வஞ்சியாது எதிர்த்தல், நீங்குதல்