பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடை

103

கட்டியம்


கடை = கீழ், இடம், பின், காம்பு, எல்லை, முடிவு, வாயில், இழிவு
கடைகள் = இழிந்தோர்
கடைகோல் = தீக்கடை கோல்
கடைக்கருவி = உடுக்கை
கடைக்காப்பு = பதிகத்தின் ஈற்றுப்பாடல்
கடைக்கால் = ஊழிக்காற்று, அஸ்திவாசம்
கடைசியர் = மருத நிலப் பெண்கள்
கடைஞர் = மருதநிலமக்கள், இழிந்தவர்
கடைதிறப்பு = கதவுதிறத்தல்
கடைத்தலை = முதல்வாயில்
கடைபோதல் = முடிதல், நிறைவேறல்
கடைப்பிடி = சித்தாந்தம், உறுதி, அபிமானம்
கடைமணி = ஆராய்ச்சி மணி, பூண்
கடைமீன் = இரேவதி நட்சத்திரம்
கடைமுகம் = தலைவாயில்
கடையம் = இந்திராணி கூத்து
கடையாயர் = இழிந்தோர்
கடையுவா = அமாவாசை
கட்கம் = வாள், அக்குள், ஒரு மிருகம்
கட்சி = பறவைக்கூடு, காடு, பக்கம், புகலிடம், மனிதர் படுக்கை, பிரிவு, போர்க்களம், சேக்கை
கட்செவி = பாம்பு
கட்டங்கம் = மழுவாயுதம், தண்டு
கட்டம் = துறைமுகம், சிரமம், நீராடும் துறை
கட்டல் = தோண்டல், கட்டுதல், திருடல், களைஎடுத்தல்
கட்டழகு = பேரழகு
கட்டளை = உவமை, முறை, விதி, உத்தரவு, உரைகல், தரம், கோயில் தருமம், செங்கல் அச்சு
கட்டளைக்கல் = உரைகல்
கட்டாடி = வண்ணான், குறி சொல்வோன்
கட்டாணி = சமர்த்தன், உலோபி
கட்டாரி = சூலம், சிறுவாள்
கட்டி = சர்க்கரை,கற்கண்டு, பொன், பிளவை, திரளை, பரு
கட்டியக்காரன் = புகழ்வோன்
கட்டியங்கூறல் = புகழ்ச்சிக்கூறல்
கட்டியம் = புகழ்ந்து பேசல்