பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கணையாழி

105

கண்ணுள் வினைஞர்


கணையாழி = முத்திரை மோதிரம்
கண் = இடம், தாட்சண்யம் துவாரம், மூங்கில், விழி, கணு, அறிவு, அழகு, அல்லி
கண்கூடு = பிரத்தியட்சம்
கண்டகம் = காடு, முள்ளி, வயிரம், முள், வாள், கொடுமை
கண்டகர் = அசுரர், கீழ் மக்கள்
கண்டகி = தாழை, ஒருநதி, இலந்தை, பொல்லாதவள்
கண்டபேரண்டம் = இரு தலைப்பறவை, பெருவலி
கண்டம் = சர்க்கரை, கழுத்து, குரல், மணி, துண்டம், பல்வண்ணத்திரை, இடையூறு
கண்டல் = தாழை, நீர்முள்ளி
கண்டன் = வீரன், சோழன்
கண்டாமணி = வீரக்கழல், பெருமணி
கண்டி = உருத்திராக்கம், எருமைக்கடா, சிறுகீரை
கண்டிகை = உருத்திராக்கம், தோளணி, கழுத்தணி
கண்டீரவம் = சிங்கம்
கண்டு = கற்கண்டு, கட்டி
கண்டுமுட்டு = கண்டதனாலான தீட்டு
கண்டுமுதல் = மொத்தவரவு
கண்டுதி = தினவு
கண்டுயம் = தினவு
கண்டை = யானை மணி, விரக்கழல், சரிகை
கண்ணராவி = துக்கநிலை
கண்ணல் = கருதல், குறித்தல்
கண்ணழித்தல் = பதப்பொருள் கூறல்
கண்ணழிவு = பதவுரை கூறல், தாமதம், குறைவு
கண்ணறை = குருடு, அகலம், வன்நெஞ்சு, சிறுஅறை
கண்ணுளர் = சித்திரக்காரர், அன்பர்
கண்ணி = வலை, கயிறு, பூமாலை, ஒரு பாட்டு, போர்ப் பூ
கண்ணிலி = எறும்பு
கண்ணிறை = தூக்கம்
கண்ணுகம் = குதிரை
கண்ணுதல் = சிவன், நெற்றிக் கண், கருதுதல்
கண்ணுளார் =நடிகர், பாணர், சித்திரக்காரர்
கண்ணுள் = கூத்து
கண்ணுள் வினைஞர் = சித்திரக்காரர்

14