பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடையலர்

6

அணுக்கத்தொண்டர்


அடையலர் = பகைவர்
அடைவு = முறை, ஏது, துணை, வரலாறு, அடைதல்
அட்சதை = மங்கல அரிசி
அட்சயதூணி = அர்ச்சுனன் அம்புக்கூடு
அட்சயபாத்திரம் = பிச்சைப் பாத்திரம், உணவு வற்றாத பாத்திரம்
அட்சரம் = எழுத்து
அட்சி = கண்
அட்டகம் = எட்டின் கூட்டம்
அட்டகாசம் = ஆரவாரம், பெருஞ் சிரிப்பு
அட்டமூர்த்தி = மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சந்திர, சூரியர், ஆன்மா ஆகிய எட்டு வடிவாக உள்ள சிவன்
அட்டம் = எட்டு, குறுக்கு, நேர், அருகு
அட்டல் = அழித்தல், சமைத்தல்
அட்டவணை = வரிசைக் குறிப்பு
அட்டாக்கரம் = திருமாலுக்குரிய எட்டு எழுத்தாலான மந்திரம்
அட்டாலம் = மேல் வீடு
அட்டாவதானம் = ஒரே சமயத்தில் எட்டுக் காரியங்களை நினைத்தல்
அட்டி = தடை
அட்டில் = சமையல் அறை
அணங்காடுதல் = தெய்வம் வந்தாடுதல்
அணங்கு = தெய்வம், தெய்வப்பெண், நோய், கொலை, அச்சம், வருத்தம், பேய்மகள், அழகு, ஆசை
அணங்குதல் = விரும்புதல், வருத்துதல், கொல்லுதல்
அணல் = தாடி, கழுத்து, கீழ்வாய்
அணவல் = கிட்டல், பொருந்தல்
அணவு = நடு
அணி = அழகு, ஆபரணம், படை வகுப்புக் கூட்டம், அடுக்கு
அணிகம் = ஊர்தி, நகை
அணிகலம் = ஆபரணம்
அணிந்துரை = பாயிரம்
அணிமா = அணுப்போல் ஆகும் எண்வகைச் சித்துக்களில் ஒன்று
அணியம் = கப்பலின் முற்பக்கம்
அணியல் = மாலை, அணிதல்
அணிவிரல் = மோதிர விரல்
அணு = உயிர், மிகச்சிறியது, சூட்சமதேகம்
அணுகலர் = பகைவர்
அணுக்கத்தொண்டர் = அந்தரங்க அடியார், நெருங்கியுள்ள தொண்டர்