பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கபடநாடகசூத்திரன்

108

கம்பமா


கபட நாடகசூத்திரன் = திருமால்
கபந்தம் = உடல் குறை
கபர்த்தம் = சிவன் சடை
கபர்த்தி = சிவன்
கபாடம் = கதவு, காவல், பொதி
கபாலி = வயிரவன், சிவன்
கபி = குரங்கு
கபிஞ்சலம் = காடை
கபித்தம் = விளாமரம்
கபிலம் = கரிக்குருவி, கருமை கலந்த பொன்னிறம்
கபிலை = தெய்வப்பசு, ஏற்றம்
கபோதம் = புறா
கபோலம் = கன்னம்
கப்படம் = ஆடை, அரை
கப்பணம் = கைவேல், காப்புக்கயிறு, இரும்புமுள்
கப்பரை = பிச்சைப்பாத்திரம்
கப்பற்பாட்டு = ஏலப்பாட்டு
கப்பித்தல் = கிளைவிடல், பெருத்தல்
கப்பு = தோள், பிளவு, கவர்ச்சி, சிறுகிளை
கப்புவிடுதல் = கிளைவிடுதல்
கம = நிறைவு
கமகன் = நூற்பொருள் விரிக்க வல்லவன்
கமஞ்சூல் = மேகம்
கமடம் = ஆமை
கமண்டலம் = சுரைக்குடுக்கை, நீர்ப்பாத்திரம்
கமதம் = நடை, சேர்தல்
கமம் = நிறைவு, விளைநிலம்
கமர் = நிலப்பிளவு, விலக்கு
கமலம் = தாமரை, நீர், செம்பு, ஒரு பேரெண்
கமலயோனி = பிரமன்
கமலாலயம் = திருவாரூர்
கமலை = இலக்குமி, திருவாரூர்
கமறுதல் = அழுதல், மிக ஒலித்தல், மிகவேகுதல்
கமனகுளிகை = நினைத்த இடத்திற்குக் கொண்டு போய்விடும் மருந்து
கமனம் = போதல்
கமித்தல் = பொறுத்தல், தாங்குதல், போதல்
கமுகு = பாக்குமரம்
கமுக்கட்டு = அக்குள்
கமுக்கம் = அடக்கம்
கமை = பொறுமை, பூமி, மலை
கமைப்பு = பொறுமை
கம் = ஆகாயம், செயல் விரைவு, வெண்மை,தலை,நீர், மேகம், உயிர், ஆடு, மோட்சம், தொழில்
கம்பமா = யானை