பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கரகம்

110

கராம்




கரகம் = ஆலங்கட்டி, கமண்டலம், கெண்டி, குடம், நீர்த்துளி
கரகரப்பு = தினவு
கரசம் = நகம், யானைக் கரணம்
கரசரணாதி = கை,கால் முதலியன
கரசல் = புன்செய் நிலம்
கரடகம் = கபடம்
கரடகன் = வஞ்சகன்
கரடம் = காக்கை, யானை மதம் பாய் சுவடு, யானை மதம்
கரடிக்கூடம் = அசங்கம்
கரடு = மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது, மரக்கணு
கரணம் = கணிதம், இந்திரியம், அந்தக் கரணம், உடம்பு, செய்கை, மனம், கூத்துவகை, கருவி, மணச்சடங்கு, கைத்தொழில்
கரணர் = கணக்கர்
கரணை = கரண்டி, துண்டு
கரண்டகம் = பூக்குடலை, சுண்ணாம்புச் செப்பு
கரண்டம் = நீர்க்காக்கை, கமண்டலம்
கரண்டை = முனிவர் வாழ்இடம், குண்டிகை, கமண்டலம்
கரதலாமலகம் = உள்ளங்கை நெல்லிக்கனி
கரத்தல் = மறைத்தல், கவர்தல்
கரந்தை = பகைவர் கொண்ட பசுக்களை மீட்போர் அணியும் மாலை
கரபத்திரம் = கைவாள்
கரபம் = யானை
கரபல்லவம் = கை விரல்
கரபாத்திரம் = கையே பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்று உண்டு வாழ்தல்
கரப்பு = மறைப்பு, களவு, வஞ்சகம், மீன் பிடிக்கும் கூடை, மத்து
கரம் = கழுதை, கிரணம், குடிமக்கள் செலுத்தும் வரி, கை, விஷம், செயல், யானைத்துதிக்கை
கரவடம் = களவு, வஞ்சகம்
கரவாளம் = கைவாள்
கரவீரம் = அலரி, மயானம், வாள்
கரவு = ஒளித்தல், பொய், களவு, வஞ்சகம், முதலை, உலோபம்
கரளம் = விஷம்
கரா = முதலை
கராசலம் = யானை
கராம் = முதலை