பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கராளம்

111

கருந்தனம்




கராளம் = தீமை, தீக்குணம்
கரி = சாட்சி, பெட்டைக் கழுதை, யானை, விஷம், அடுப்புக்கரி, கருமை
கரிசல் = கருமை
கரிசனம் = யானைக்கொம்பு, அன்பு
கரிசனை = அன்பு
கரிசு = குற்றம், பாபம்
கரிணி = பெண்யானை, மலை, மலைக்குகை
கரித்தல் = உறைத்தல், கார்த்தல், வெறுத்தல்
கரிப்பு = அச்சம், நிந்தித்தல்
கரிமா = கனமாதல் சித்தி
கரிமுக அம்பி = யானை முக ஓடம்
கரிமுகன் = விநாயகன்
கரியர் = கீழ்மக்கள், நடுச்சொல்வோர்
கரியவன் = கண்ணன், சனி, இந்திரன்
கரீல் = குற்றம், கொடுமை, கார்ப்பு
கரீரம் = அகத்தி, குடம், யானைப் பல்லடி
கரு = பிறவி, முட்டை, நடு, கருநிறம், அணு
கருகூலம் = பொக்கிஷம்
கருக்கம் = கார்மேகம்
கருக்கல் = இருள், மந்தாராம், காய்ந்த பயிர்
கருக்காய் = பிஞ்சு
கருக்கிடை = ஆலோசனை
கருக்கு = பொறித்தசித்திரம், கூர்மை, நேர்மை
கருக்குழி = திட்டுதல், கருப்பாசயம்
கருங்களமர் = பறையர்
கருங்காடு = சுடுகாடு
கருங்கை = வன்தொழில், கொலைத் தொழில், வலிய கை
கருங்கொல் = இரும்பு
கருஞ்சனம் = முருங்கை
கருட பஞ்சமி = ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமி திதி
கருணம் = எலிமிச்ச மரம்
கருணாகடாட்சம் = கிருபைப் பார்வை
கருணாகரம் = அருட்கடல்
கருணி = மலை, குகை
கருணீகன் = கணக்கன்
கருதலர் = பகைவர்
கருதுதல் = விரும்பல், எண்ணால், மதித்தல்
கருத்தபம் = கழுதை
கருநெய்தல் = கருங்குவளை மலர்
கருநெறி = தீ
கருந்தனம் = பொன், செல்வம்