பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருந்தாது

112


கருந்தாது = இரும்பு
கருப்பக்கிரகம் = மூலஸ்தானம்
கருப்பட்டி = பனைவெல்லம்
கருப்பம் = உள்,சினை
கருப்பாசயம் = கரு இருகும் இடம்
கருப்புக்கட்டி = வெல்லம்
கருப்புவில் = மன்மதன் வில்
கருப்பை = எலி, கருவாகிய பை
கருவி காரணங்கள் = இந்தியங்களும் மனமும்
கருப்பொருள் = குறிஞ்சி,முல்லை, நெய்தல், மருதம் பாலையாகிய நிலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள், காரணப் பொருள்
கருமம் = வெப்பம், செய்கை,கிரியை
கருமா = பன்றி, யானை
கருமான் = பன்றி,கொல்லன்
கருமுகில் = கருமேகம்
கருமேந்திரியம் = தொழில்களைச் செய்யும் இந்திரியங்கள்
கருமை = பெருமை, கொடுமை, கறுப்பு, வலிமை,பசுமை
கரும்பிள்ளை = காக்கை
கரும்பு = புனர்பூசநாள், கரும்பு
கரும்புல் = பனை
கரும்புள் = வண்டு
கரும்புறம் = பனை
கரும்பொன் = இரும்பு
கருவடம் = மலையும் ஆறும் சூழ்ந்த ஊர்
கருவரி = இருள்
கருவாலி = ஒரு குருவி
கருவி = மேகம், கூட்டம் கவசம், ஆயுதம்,தொகுதி உபகரணம், யாழ், கைத்தாளம், கேடகம், சித்திரம்
கருவிகானங்கள் = இந்தியங்களும் மனமும்
கருவிளம் = வில்வம்
கருவினை = பாவம்
கருவுயிர்த்தல் = ஈனுதல்
கருவூர் = வஞ்சிமாநகர்
கருவூலம் = பொக்கிஷம்
கருவை = கரிவலம்வந்த நல்லூர்,வரகு வைக்கோல்
கருளன் = கருடன்
கருள் - இருள், குற்றம், கறுப்பு ,நல்லாடை,சீற்றம், யானை
கருனை = பொரிக்கறி
கரேனு = யானை, பெண்
கரைதல் =அழுதல், அழைத்தல், ஒலித்தல், இழைத்தல், சொல்லுதல், வருந்துதல்
கரையார் = வலைஞர்,செம்படவர்
கரோடி = முடிமாலை