பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113


கரோருகம் = நகம்
கர்க்கடகம் = நண்டு
கர்ச்சூரம் = பேர் ஈச்சம்
கர்ணபரம்பரை = கேள்வி வழியாக வந்த செய்தி
கர்ணம் = காது, கணக்கன்
கர்ணவேதம் = காதுகுத்துதல்
கர்ணிகை = தாமரைக் கொட்டை
கர்த்தபம் = கழுதை
கர்த்திவ்யம் = செய்யத்தக்கது
கர்ப்பக்கிருகம் = மூலஸ்தானம், கருவீடு
கர்ப்பூரம் = பொன், சூடம்
கர்வம் = ஒரு பேரெண், கர்வம்
கலகம் = போர், மாறுபாடு, பேர் ஒலி
கலங்கரைவிளக்கம் = கடலில் வரும் கப்பல்கட்கு கரை அறிவிக்க அமைத்த தீபஸ்தம்பம்
கலசமுனி = அகத்தியன், கலோர்ப்பவன்
கலதி = மூதேவி, கேடு, தீக்குணமுடையோன்
கலப்பை = யாழ், உழுப்படை, வாத்தியப்பை
கலமர் = பாணர்
கலம் = கப்பல், நகை, யாழ், பாத்திரம், ஆயுதம்
கலர் = கீழ் மக்கள்
கலவம் = தோகை
கலவர் = பரதவர், படைவீரர்
கலவி = புணர்ச்சி
கலவை = சேறு, சுண்ணச்சாந்து
கலனை = கலப்பை, சேணம்
கலன் = கீழ் மகன், கொடியன், கலம்
கலா = நூல்
கலாநிதி = சந்திரன்
கலாபம் = அரைப்பட்டிகை, மயில் தோகை
கலாம் = ஊடல், கொடுமை, போர், கோபம், கலகம், மாறுபாடு
கலாய்த்தல் = கோபித்தல்
கலி = ஓசை, வறுமை, சனி, கலியுகம், கலிப்பா, மகிழ்ச்சி, எழுச்சி, வலி, போர், துன்பம், செருக்கு, விழா, கலகம், முழக்கம்
கலிகை = பூவரும்பு
கலிங்கம் = ஊர்க்குருவி, குதிரை, சிலை, போர்வை, வானம்பாடி

15