பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114


கலித்தல் = எழுச்சி, ஒலித்தல்,உண்டாதல், தழைத்தல், மிகுதல், மகிழ்தல்,செருக்குதல்
கலிபிலி = ஆரவாரம்,கலகம்
கலிப்பு = ஒசை, உயரம்,மிகுதி, பொலிவு
கலியன் = திருமங்கை யாழ்வார், சனி
கலியாணி = பார்வதி
கலியாப்தம் = கலிவருஷம்
கலிழ்தல் = அழுதல், ஒழுகுதல்
கலினம் = கடிவாளம்
கலினை = மிளகு
கலியம் = கடிவாளம்
கலுடம் = பாவம், கலங்கல் நீர்
கலுவடம் = பூவரும்பு
கலுழன் = கருடன்
கலுழி = அழுகை, வெள்ளம், வண்டல், கலக்கம், காட்டாறு, கலங்கல் நீர்
கலுழ் = கலக்கம், அழுகை
கலுழ்ச்சி = துக்கம், அழுகை
கலுழ்தல் = அழுதல், உருகுதல், பொருந்துதல், கலங்குதல், ஒழுகுதல்
கலை = ஆண்மான், ஆண் குரங்கு, சீலை, மகரமீன், மேகலை, சாமர்த்தியம், சந்திரன், அம்ஸம், கால நுட்பம், கல்வி, நூல், சரீரம், சாத்திரம்
கலைஞர் = புலவர்
கலைமகள் = சரஸ்வதி, கலைமான்
கலையானத்தி = துர்க்கை
கலைவாகன் = வாயு
கலைவாணி = கலைமகள்
கல் = மலை, கல்வி, பாறை,இரத்தினம், தோண்டு,முத்து,
கல்மஷம் = குற்றம்
கல்யாணம் = பொன், நற்குணம், சுபம், மணம்
கல்லகம் = மலை
கல்லடார் = விலங்கைப் பிடிக்கும் கருவி
கல்லணை = குதிரைத்தவிசு
கல்லல் = குழப்பம்
கல்லளை = மலைக்குகை
கல்லறை = மலைக்குகை,பிணக்குழி
கல்லாடை = காவி வஸ்திரம்
கல்லாரம் = செங்கழுநீர்மலர்
கல்லி = ஆமை, ஊர்க்குருவி