பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காதல்

122

காமரம்





காதல் = கொல்லல், மகன், தாக்குதல், அன்பு, ஆசை, பக்தி
காதீ = விசுவாமித்திரன், தந்தை, வினை
காதுகன் = கொலையாளி
காதுகை = கொல்லுகை
காதை = பாட்டு, சரித்திரம், கதை கொண்ட பகுதி, கொலை
காத்தல் = விலக்கல், அரசாளுதல், பாதுகாத்தல்
காத்தியாயனி = பார்வதி, துர்க்கை
காத்திரம் = உடல், உறுப்பு, கனம், கோபம், யானையின் முன்கால், கீரி காத்திரவேயம் = பாம்பு
காந்தம் = அழகு , விருப்பம்
காந்தர்வமணம் = தலைவனும் தலைவியும் தாமே கூடிக் காதலித்து
மணத்தல்
காந்தல் = சினம், கருகல்
காந்தள் = கார்த்திகைமலர்
காந்தன் = புருஷன், தலைவன், ஒரு சோழன்
காந்தாரம் = ஓர் இசை, ஒரு பண், காடு
காந்தாரி = இராகம், சகுனி, துரியன் தாய்
காந்தி = ஒளி, அழகு
காந்துதல் = ஒளிர்தல், முதிர்தல்
காந்தை = பெண், மனைவி
காபந்து = பாதுகாவல்
காபாலம் = சிவனார் கூத்து
காபிலஸ்நானம் = தலைமுதல் பாதம்வரை ஈரத் துணியால் துடைத்தல் காப்பியம் = உறுதிப் பொருளைக் கூறும் கதை தழுவிய் தொடர் நிலைச் செய்யுள்
காப்பியன் = சுக்கிரன்
காப்பு = கதவு, விபூதி, அரச முத்திரை, ஊர், மதில், அரசன் அனுபவிக்கும் பொருள், தெய்வ வணக்கப் பாடல், அபிடேகம், சிறை, காவல், பாதரட்சை, இரட்சிப்பு, காத்தல், திசைப் பாலகர்
காப்புமறம் = காவல் வீரர்
காப்பொன் = நூறுபலம் பொன்
காமக்கிழத்தி = வேசி
காமக்கோட்டம் = காமாட்சி கோவில்
காமபாலன் = பலதேவன்
காமபீடம் = காஞ்சீபுரம்
காமம் = ஆசை, சிற்றின்பம், கிராமம்
காமரம் = வண்டு, ஒர் இசைப் பாட்டு, அஸ்த நாள, அடுப்பு, அகில் ஒருபண், ஆல்