பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123



i23

காமரூபி

காராண்மை

காமரூபி=பச்சோந்தி
காமர்=அழகு, ஆசை, காமுகர்
காமன் =மன்மதன்
காமவல்லி= கற்பகத்தில் படர் கொடி
காமாட்டி = முடன், மண் வெட்டுவோன்
காமித்தல் = விரும்பல்
காமவாயில் = இயற்கை அன்பு
காமாரி = சிவன்
தாமியம் = ஒன்றை வேண்டிச்செய்யும் பூசை, கன்ம மலம்
காமினி= பெரீந்து, ஆகாய கமன மந்திரம்
காமுகன் = திருமால், நாகரிகன்
காம்பீரியம் = ஆழமுடைமை, மேன்மை, ஆழம்
காம்பு = மூங்கில், பூந்தாள், பட்டு
காயகற்பம் = உடலை வன்மையாக்கும் மருந்து
காயசித்தி = உடலை நீண்ட நாள் இருக்கச் செய்யும் சித்தி
காயத்திரி = பிரமன் மனைவி, ஒரு மந்திரம்
காயம் = உடம்பு, ஆகாயம், பெருங்காயம், வெங்காயம், இயற்கை, மூலதனம்,மிளகு, வயிரம், இலக்கு, நிலைபேறு
காயல் = உப்பளம், கழி, காய்தல், காயற்பட்டினம்
காயாபுரி= சரீரம்
காயாம்பூமேனியன் = விஷ்ணு
காய் =பாக்கு, காய்
காய்தல்= வெறுத்தல், சுடுதல், கெடுத்தல், வருந்தல், பெருங்கோபம், ஆறுதல், உலர்தல், அழித்தல், எரித்தல், விலக்குதல், வெகுளுதல்
காய்மகாரம் = பொறாமை
காரகம் = சிறைச்சாலே
காரகன் = செய்பவன்
காரணி = உமை
காரணிகன் = பரிசோதகன், மத்தியஸ்தன், நடுவன்
கரண்டம் = நீர்க்காக்கை
காரம்= விபூதி, கோபம், அழிவு
காரா = எருமை, சிறைச்சாலை
காராகாரம்
காராகிரும் = சிறைச்சாலை
காராடு = வெள்ளாடு
காராண்மை= பயிரிடும் குடியுரிமை