பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருமி

130

கிற்பன்



கிருமி = புழு
கிரெளஞ்சம் = அன்றில் பறவை, ஒரு மலை
கிலம் = அற்பம்
கிலீபம் = பேடு
கிலுத்தம் = ஒருவகைமரம், முதல் சந்து, மணிககட்டு
கில்லம் = கழுத்து
கில்லாதார் = மாட்டாதவர்
கிழக்கு = இழிவு, கீழ் இடம்
கிழத்தி = மனைவி, உரியவள், தலைவி
கிழமை = வாரநாள், உரிமை, குணம், சம்பந்தம், நட்பு, முதுமை
கிழவன் = தலைவன், உரியவன், பரணிநாள்
கிழார் = இறைகூடை, தோட்டம், வேளாளர் பட்டப் பெயர்
கிழான் = வேளாளன், உரியவன்
கிழி = எழுதுபடம், பொருள் முடிப்பு, கிழிந்த துணி
கிழிதம் = பணமுடிப்பு
கிழிப்பு = குகை, பிளப்பு
கிழியீடு = பொன் முடிப்பு, புதையல்
கிளக்கல் = சொல்லல்
கிளத்தல் = சொல்லல்
கிளத்தி = சரஸ்வதி
கிளப்பு = சொல், எழுப்பு
கிளர் = ஒளி, பூந்தாது
கிளர்ச்சி = இறுமாப்பு, கோபம், எழிச்சி, கலவரம்
கிளர்தல் = உயர்தல், கோபித்தல், விளங்குதல்,
பெருகுதல், சிறத்தல், மேல் எழும்புதல், ஒளி விடுதல்
கிளர்வு = பெருக்கம்
கிளவி = சொல், அகப்பொருள் துறை
கிளிச்சிறை = ஒருவகைப் பொன்
கிளை = மூங்கில், உறவு, பகுப்பு, தளிர், யாழ் நரம்பு, பூங்கொத்து
கிளைஞர் = உறவினர்
கிளைத்தல் = கிண்டல், நிறைதல், பெருகுதல்
கிளைமை = உறவு
கிளையாமை = இளையாமை
கிளைவழி = வமிசம்
கிள்ளி = சோழன், சோழர் சிறப்புப் பெயர்
கிள்ளை = கிளி, குதிரை
கிறி = பொய், வஞ்சகம், வழி, மாயம், குழந்தை யணி
கிறுக்கு = எழுத்து
கிற்பன் = அடிமையன்