பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிற்பு

131

கீன்றல்



கிற்பு = வேலைப்பாடு, வலிமை
கிற்றல் = கட்டுப்படுத்துதல், சம்மதித்தல்
கின்னம் = துக்கம், கீழ்மை, தொந்தரவு
கின்னரம் = வீணை, இசையறி பறவை
கின்னரி = வீணை




கீகசம் = எலும்பு, எலும்பை ஒட்டிய சதை, புழுச்சாதி
கீசகம் = குரங்கு, மூங்கில்
கீசம் = குரங்கு, குருவி
கீசரி = சரக்கொன்றை
கீடம் = புழு
கீடமணி = மின்மினி
கீணம் = கீழ்மை, கேடு, சிதைவு
கீதம் = வண்டு, மூங்கில், இசை
கீதை = பாடல், பகவத்கீதை
கீரம் = கிளி, பால், நீர்
கீரன் = நக்கீரன்
கீர் = சொல், பாயசம்
கீர்த்தனை = புகழ்ச்சி, இசைப் பாட்டு
கீர்வாணம் = சமஸ்கிருத மொழி
கீலகம் = ஆணி, தந்திரம், பொருத்து
கீலம் = ஆப்பு, தூண், ஆணி, துண்டம், பீசின், தார், சுடர்க் கொழுந்து, ஆயுதம்
கீலாரி = இடையர் தலைவன்
கீலாலம் = நீர், அமுது, இரத்தம்
கீழண்டை = கிழக்குப்புறம்
கீழோர் = கீழ்மக்கள், உழவர்
கீழ் = கிழக்கு, பள்ளம், ஈனம், கீழ்மக்கள், இழிவு, குற்றம்
கீழ்க்கணக்கு = அறம் பொருள் இன்பம் கூறும் சிறு பாட்டு நூல்
கீழ்ப்பால் = கீழ்ச்சாதி
கீள் = கௌபீன உடை
கீளுடை = கோவணம்
கீறு = எழுத்து, பிளப்பு
கீனம் = குறைவு, இழிவு
கீன்றல் = சீறுகை, கிழித்தல்