பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கு



கு = சிறுமை, தடை, நிந்தை பாவம், பூமி, இகழ்ச்சி, நீக்குதல்
குகரம் = குகை, நில அறை
குகன் = முருகன், எலி, பாம்பு, குரு
குகு = அமாவாசை
குகை = உலோகங்களை உருக்கும் பாத்திரம், சிமிழ், குகை
குக்கல் = நாய்
குக்கி = வயிறு
குக்கில் = குங்கிலியம்
குக்குடம் = கோழி
குக்குலுவம் = குங்கிலியம்
குங்குலியம் = ஒரு வாசனைப் பொருள்
குசம் = முலை, தருப்பை, நீர், கடிவாளம், மரம்
குசலம் = சுகம், சாமர்த்தியம், கலம், தந்திரம், நற்குணம், கூர்மை
குசவாரம்= செவ்வாய்க் கிழமை
குசன் = செவ்வாய்
குசாக்கிரம் = தர்ப்பைநுனி, கூர்மை, அறிவு
குசுமம் = பூ
குசுமாகரம் = பூந்தோட்டம், வேனிற்காலம்
குசேசயம் = தாமரை
குசை = கடிவாளம், தருப்பை, குதிரையின் பிடரி மயிர்
குச்சம் = பூங்கொத்து, குன்றி மணி, நூல் கொத்து, நாணல், கூர்ச்சரதேசம், புறந்தூற்றுமொழி
குச்சிதம் = இழிவு
குச்சில் = சிறு வீடு
குச்சு = மயிர் முடி, கொண்டையூசி, சிறு குடில்
குச்சுக்காரி = ஒழுக்கம் கெட்டவள்
குஞ்சம் = சிறுமை, பூங்கொத்து, குறளை, கோட் சொல்லல், நாழி, கூன்
குஞ்சரம் = யானை, கருங்குவளை
குஞ்சரவொழுகை = யானை வண்டி
குஞ்சராசனம் = அரசமரம்
குஞ்சரி = பெண்யானை, தெய்வயானை